சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி சமீபத்தில் ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இறுதி ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்ற கையோடு எம்எஸ் தோனி அடுத்த வருடம் ரசிகர்களுக்காகவே தான் விளையாடுவதாக கொடுத்த வாக்குறுதி பலரையும் கண்கலங்க வைத்தது.
எம்எஸ் தோனி கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து நிறுத்தினாலும், தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியுடனும், சிஎஸ்கே அணியுடனும் தொடர்பில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் எம்எஸ் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தனது ரூ.880 கோடி வர்த்தக சாம்ராஜ்ஜியத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பாக எம்எஸ் தோனி பெயரில் ஒரு சினிமா ப்ரொடெக்ஷன் நிறுவனம் திறக்கப்பட்டு, முதல் படமாக தமிழில் ஹரிஷ் கல்யாண், லவ் டூடே புகழ் இவானா ஆகியோர் நடிக்கும் LGM படம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தின் டீசர் கூட சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
பல கோடி ரூபாய் புரளும் Dhoni Entertainment Limited நிறுவனத்தில் எம்எஸ் தோனி தலைவராக இல்லை, அவருடைய பெயர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதேவேளையில் ஷீலா சிங்கால் என்பவர் இந்நிறுவனத்தின் சேர்மன் ஆக உள்ளார். யார் இவர்..?
MS தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் ஷீலா சிங் சேர்மன் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். ஷீலா சிங், சாக்ஷி சிங் தோனியின் தாய் மற்றும் எம்எஸ் தோனியின் மாமியார் ஆவார்.
MS தோனி தனது வணிக சாம்ராஜ்யத்தை எப்படி விரிவுபடுத்துவதில் வெளியாட்களை அதிகம் ஈடுபடுத்தாமல் தனது குடும்ப உறுப்பினர்களையே அதிகம் ஈடுப்படுத்துகிறார். தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரிகளான சாக்ஷி தோனி மற்றும் அவரது தாயார் ஷீலா சிங் ஆகியோர் 2020 முதல் இந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்து வருகின்றனர்.
தற்போதைய நிலையில் எம்எஸ் தோனியின் மொத்த சொத்து மதிப்பு 1030 கோடி ரூபாய். தோனி அதிகம் சம்பாதிப்பதில் மட்டும் அல்ல அதிகப்படியான வரியும் செலுத்துகிறார். எம்எஸ் தோனியின் வருமானம், பிஸ்னஸ், சொத்து மதிப்பு-ன் முழு விபரம் தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications