உலகளாவிய பங்குச் சந்தைகளை ஆய்வு செய்து பல்வேறு முக்கிய நுண்ணறிவுகளையும், பல்வேறு இன்டெக்ஸ்களையும் நிர்வாகம் செய்யும் எம்.எஸ்.சி.ஐ (MSCI) செவ்வாய்க்கிழமை தனது காலாண்டு மறுசீரமைப்பை மேற்கொண்டது.
இதன் முடிவில் MSCI அமைப்பின் மிக முக்கிய குறியீடாகப் பார்க்கப்படும் Emerging Markets குறியீட்டில் இந்திய நிறுவனங்களின் பங்கீடு 18.3 சதவீதத்தில் இருந்து மே 31 முதல் சுமார் 19 சதவீதமாக அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் (FII) சுமார் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை இந்தியப் பங்குச் சந்தைக்குக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நுவைமா நிறுவனத்தின் அபிஷேக் பகாரியா கூறுகையில், இந்த மாற்றங்கள் மே 31 அன்று நடைபெறவுள்ளன, மேலும் இந்தியாவில் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. MSCI EM குறியீட்டில் 13 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டு 3 நிறுவனங்கள் நீக்கப்படுவதன் மூலம், இந்த மறுசீரமைப்புக்குப் பிறகு MSCI EM குறியீட்டில் இந்தியாவின் பங்கு எண்ணிக்கை 146 ஆக இருக்கும்.
கூடுதலாக, ஸ்மால்கேப் நிறுவனங்கள் குறியீட்டில் (Smallcap Index) 14 புதிய பங்குகள் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம், ஸ்மால்கேப் நிறுவனங்கள் குறியீட்டில் இந்தியாவின் மொத்த பங்கு எண்ணிக்கை 497 ஆக உயரும் என்று நுவைமா நிறுவனத்தின் அபிஷேக் பகாரியா தெரிவித்தார்.
எம்.எஸ்.சி.இ.எம் குறியீட்டில் இந்தியாவின் எடை 18.3 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அதிகரிப்பது, வளரும் சந்தை மத்தியில் முக்கியமான மாற்றமாகவும், சர்வதேச முதலீட்டாளர்கள் சந்தையில் முக்கிய கவனத்தையும் இந்தியப் பங்குச்சந்தை பெறுகிறது.
இதேவேளையில் சீனா MSCI EM குறியீட்டில் அதிக பங்குகளை (25.7%) கொண்டுள்ளது, அந்நாட்டின் 703 பங்குகள் இந்த குறியீட்டில் இடம் பெற்றுள்ளன. இதற்கு மாறாக, இந்தியா 18.3% எடையுடன் 136 பங்குகளைக் கொண்டுள்ளது, மே 31க்கு பின்பு 146 நிறுவனங்கள் உடன் 19 சதவீத பங்கீட்டை இந்தியா கொண்டிருக்கும்.
MSCI EM குறியீட்டில் இந்தியாவின் பங்கீடு 2020 ஆம் ஆண்டில் இருந்த 8 சதவீதத்திலிருந்து தற்போது 19 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது உள்நாட்டு முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய பங்குகள்.
பாலிசிபஜார், சுந்தரம் ஃபைனான்ஸ், என்.எச்.பி.சி, ஃபீனிக்ஸ் மில்ஸ், இந்தஸ் டவர்கள், போஷ், ஜிண்டால் ஸ்டெயின்லெஸ், சோலார் இண்டஸ்ட்ரீஸ், டாரண்ட் பவர், மன்கைண்டு பார்மா, JSW எனர்ஜி, கனரா வங்கி, தெராமேக்ஸ் ஆகிய 13 பங்குகள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் AU ஸ்மால் பைனான்ஸ் பேங்க், வேதாந்தா, மேக்ரோடெக் டெவலப்பர்ஸ், சோமேட்டோ, பாலிகேப், சம்வர்தான மதர்சன், யெஸ் வங்கி, சுஸ்லான் எனர்ஜி ஆகியவற்றின் பங்கீடு அதிகரிக்கும் காரணத்தால் மே 31 முதல் இப்பங்குகளின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
மேலும் பெர்ஜர் பெயின்ட்ஸ், IGL, பேடிஎம் ஆகியவை நீக்கப்பட்டு உள்ளது, MSCI ஸ்மால்கேப் குறியீட்டில் 29 பங்குகள் சேர்க்கப்பட்டும், 15 நிறுவனங்கள் நீக்கப்பட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications