இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி 2015 காலக்கட்டத்திலேயே, நாம் கச்சா எண்ணெய்யை மட்டும் நம்பியிருந்தால் வேலைக்கு ஆகாது என திட்டவட்டமாக முடிவு செய்தார். இதன் பின்பு தான் மக்களுக்கு நேரடியாக தனது சேவைகளையும், பொருட்களை விற்க வேண்டும் என முடிவு செய்தார். இதற்காக ஜியோ மூலம் டெலிகாம் சேவையிலும் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் மூலம் ரீடைல் சேவையிலும் குதித்தது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம்.
அடுத்த கட்டமாக லாக்டவுன் நேரத்தில் ஒட்டுமொத்த வர்த்தக துறையும் முடிங்கிய வேளையில் முகேஷ் அம்பானி டபுள் டியூட்டி செய்து கிட்டத்தட்ட 2 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் மீது திரட்டினார். இந்த மாபெரும் முதலீட்டை வைத்து அடுத்த 5 வருடத்தில் வரிவாக்கம், நிறுவன கொள்முதல், புதிய சேவை அறிமுகம் என ஒரு F1 ரேஸ் போல வேகமான வளர்ச்சி பாதைக்கு இரு நிறுவனத்தையும் திருப்பினார் முகேஷ் அம்பானி.

இந்த இடைப்பட்ட காலத்தில் முகேஷ் அம்பானி செய்த ஒரு பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் ஜியோ பைனான்சியல் சர்வீஸ் பிரிவை தனியாக பிரித்து பங்குச்சந்தையில் தனிப்பட்ட நிறுவனமாக பட்டியலிட்டது தான். இந்த நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்திற்கு முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுத்தது.
இந்த வழியலி தற்போது இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து அதன் தொலைத்தொடர்பு பிரிவான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை அடுத்த ஆண்டு ஐபிஓ வெளியிட உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்த நிலையில், தற்போது அடுத்த சர்ப்ரைஸ் வெளியாகியுள்ளது. 2020ல் 2 லட்சம் கோடி முதலீட்டை திரட்ட முடிவு செய்த போதே இலக்கு ஐபிஓ-வாக தான் இருந்தது முகேஷ் அம்பானி-க்கு, இதை தற்போது நினைவாக்குகிறார்.
முகேஷ் அம்பானி இப்போது நாட்டின் மிகப்பெரிய ரீடைல் வணிகமாத விளங்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தை 2027ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிட தயாராகி வருகிறார் என்றும் இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 200 பில்லியன் டாலராக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜியோ ஐபிஓ வெளியிட்ட அடுத்த ஆண்டே ரிலையன்ஸ் ரீடைல் ஐபிஓ வெளியிட உள்ளது என்பது தான்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் ஐபிஓ, இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும், மேலும் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய வாய்ப்பை வழங்கும் என கருத்து நிலவுகிறது. முகேஷ் அம்பானியின் இந்த முயற்சி, ரிலையன்ஸ் குழுமத்தின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒரு முக்கிய படியாக இருக்கப்போகிறது.

ஐபிஓ ஏற்பாடுகள்
ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோவுக்கான ஐபிஓ ஏற்பாடுகள் வேகமாக நடந்து வரும் வேளையில், தற்போது ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் ஐபிஓ பணிகளும் துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, எஃப்எம்சிஜி பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நேரடி துணை நிறுவனமாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிப்பு மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் முக்கிய ரீடைல் வணிகத்திலிருந்து தனித்து செயல்படுவதன் மூலம், அதன் செயல்திறனை மேம்படுத்த உதவும்.
மேலும், ரிலையன்ஸ் ரீடைல் சில மாதங்களுக்கு முன்பே செயல்படாத கடைகளை மூட முடிவு செய்துள்ளது. இதேபோல் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியாத பிராண்டுகளை மூடுவோ அல்லது மற்ற பிராண்டுகள் உடன் இணைக்கவோ முடிவு செய்துள்ளது. இப்படி ரிலையன்ஸ் ரீடைல் தனது கடை வலையமைப்பை பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்து வருகிறது. இந்த மாற்றங்கள், நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தி, ஐபிஓவில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்க்க உதவும்.

ரிலையன்ஸ் ஜியோவின் 2026 ஐபிஓவைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ரீடைலின் 2027 ஐபிஓ மூலம் லாக்டவுன் காலத்தில் இவ்விரு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் இதில் வெளியேற வாய்ப்புகள் உள்ளது. இதனால் புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் ரீடைல் முதலீட்டாளர்களுக்கும் இது பெரிய வாய்ப்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2 ஐபிஓ-வை நம்பி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் முதலீடு செய்வீர்களா..?
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications