ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திர கூட்டத்தின் முடிவில் முகேஷ் அம்பானி பேசுகையில், அடுத்த 5 வருடத்திற்கு ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக தொடர உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் முகேஷ் அம்பானி தனது 71 வயது வரையில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் உயர் பதவியில் இருக்கப்போவதாக தெரிவித்தார்.
இந்த 5 வருட காலத்தில் தனக்கு 3 முக்கிய பொறுப்புகள் இருப்பதாகவும் கூறினார் முகேஷ் அம்பானி. காரணம் 70 வயதுக்கு மேல் நிர்வாக பொறுப்பிலும், நிர்வாக குழுவிலும் பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்ட நிறுவனத்தில் இருக்க முடியாது. இதன் மூலம் அடுத்த 5 வருடத்தில் தன்னுடைய பொறுப்பை பட்டியலிட்டு உள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் முகேஷ் அம்பானி வாரிசுகளும், டெலிகாம், ரீடைல், நியூ எனர்ஜி பிரிவின் தலைவர்களான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோர் Board of Directors ஆக நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் அடுத்த 5 வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அனைத்து துறையிலும், அனைத்து பிரிவுகளிலும் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்குவது தான். அடுத்த தலைமுறை தலைவர்களை வைத்து நிறுவனத்தின் வளர்ச்சி பாதையை தீர்மானிப்பது முதல் பொறுப்பாகும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
2வதாக அனைத்து விஷயங்களிலும் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோரை வழிநடத்தி மென்டார்ஷிப் அளிப்பது தான். ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தலைவராக இருக்கிறார், ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடைல் தலைவராக உள்ளார், அனந்த் அம்பானி நியூ எனர்ஜி பிரிவை நிர்வாகம் செய்து வருகிறார்.
3வதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மட்டுமே இருக்கும் தனிப்பட்ட நிர்வாக கலாச்சாரத்தை மேம்படுத்துவது என கூறுகிறார் முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நேரடி நிர்வாகத்தில் முகேஷ் அம்பானி இருக்க போகும் கடைசி 5 வருடம் என்பதால் இது அவருடைய வாரிசுகளுக்கும், பங்கு முதலீட்டாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது. எனவே அடுத்த 5 வருடம் முகேஷ் அம்பானி உருவாக்கும் வளர்ச்சி பாதை தான் அடுத்த 15 வருடம் அவருடைய வாரிசுகள் பயணிக்க உள்ளனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications