இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தக சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் இந்த பண்டிகை காலத்தில் அனைத்து தரப்பு மக்களையும் வாடிக்கையாளராக மாற்ற வேண்டும் என்பது மட்டும் அல்லாமல் அனைத்து பிரிவுகளிலும் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முக்கிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
இந்த மாபெரும் இலக்கை அடைய வெறும் திட்டம் மட்டும் போதாது அதை சரியான முறையில், சரியான நபர் மூலம் விளம்பரம் செய்ய வேண்டும், இந்திய மக்களிடம் ஒரு பொருளை எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை முகேஷ் அம்பானிக்கும், அம்பானி குடும்பத்திற்கு யாரும் சொல்லிதர தேவையில்லை.

அந்த வகையில் தீபாவளி, தசரா பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையிலும், இந்தியாவில் உலக கோப்பை போட்டிகள் சூடுப்பிடித்துள்ள வேளையிலும் இரண்டையும் இணைக்கும் வகையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் முக்கிய பிராண்டான ஜியோ மார்ட்-க்கு ஐபிஎல் சூப்பர்ஸ்டார், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி-யை பிராண்ட் அம்பாசிட்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சமீபத்தில் தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் கொண்ட புகைப்படம் வைரலான நிலையில் இந்த அறிவிப்பும் சேர்ந்து வந்துள்ளது, ஜியோ மார்ட்-ன் பிராண்டிங் அடுத்த லெவல்-க்கு சென்றுள்ளது. இதுக்குறித்து ஜியோமார்ட் தலைவர் சந்தீப் கூறுகையில், ஜியோ மார்ட் போலேவே நம்பி, உண்மை, உறுதி ஆகிய பண்புகளை கொண்டவர் எம்எஸ் தோனி. இவரை எங்களுடைய பிராண்ட் அம்பாசிட்டராக நியமிப்பது சரியானதாக இருக்கும் என தெரிவித்தார்.

2020ல் ஜியோ மார்ட் லாக்டவுனில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு அதிகளவிலான வாடிக்கையாளர்களை ரீடைல் கடைகளிலும், ஆன்லைன் சேவை துறையிலும் பெற்றுள்ளது. ஜியோ மார்ட் தளத்தின் விற்பனையாளர் எண்ணிக்கை காலாண்டு அடிப்படையில் 56 சதவீதம் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் ரிலையன்ஸ் ரீடைல் 3 வளைகுடா நாடுகளின் முதலீட்டு நிறுவனத்திடம் இருந்து அதிகப்படியான முதலீடுகளை பெற்றது. இதை அடிப்படையாக வைத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதோடு, சொந்த பிராண்டின் கீழ் இருக்கும் பொருட்களை பெரிய அளவில் மேம்படுத்த பயன்படுத்த உள்ளது. மேலும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் ரிலையன்ஸ் ரீடைல் தான் அதிக மதிப்புடைய நிறுவனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications