மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்தியாவின் பெரும்பணக்காரர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, சாவித்திரி ஜிண்டால் மற்றும் ஷிவ் நாடார் உள்ளிட்டோர் மொத்தமாக 10 பில்லியன் டாலர்கள் வரை இழந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்துள்ளார். இதனால் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் சரிவடைந்துள்ளன. இந்திய பங்குச்சந்தைகளில் ஏப்ரல் 7ஆம் தேதி பெரிய வீழ்ச்சியை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடிகளை இழந்து கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

இந்த பங்குச்சந்தை சரிவு இந்தியாவின் பெரும் பணக்காரர்களையும் விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் இந்திய பணக்காரர்களில் முன்னிலையில் இருக்கக்கூடிய முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, சாவித்திரி ஜிண்டால் மற்றும் ஷிவ் நாடார் உள்ளிட்டோர் மொத்தமாக திங்கட்கிழமை அன்று ஒரே நாளில் மட்டும் 10 பில்லியன் டாலர்கள் வரை இழந்துள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானி தான் இந்த பங்குச்சந்தை சரிவில் பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறார் .முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இதனால் ஒரே நாளில் 3.6 பில்லியன் வரை சரிவடைந்து அவரின் மொத்த சொத்து 87.7 பில்லியன் டாலர்களாக குறைந்திருக்கிறது.
கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 3 பில்லியன் டாலர்கள் குறைந்து இருக்கிறது. அவரின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 57.3 பில்லியன் டாலராக இருக்கிறது. அடுத்ததாக சாவித்திரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பில் ஒரே நாளில் 2.2 பில்லியன் டாலர்கள் குறைந்து இருக்கிறது தற்போது இவர்களின் சொத்து மதிப்பு 33.9 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் சாவித்திரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் 45 வது இடத்தை பிடித்திருந்தனர்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 1.5 பில்லியன் டாலர்கள் குறைந்து மொத்த சொத்து மதிப்பு 30.9 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. டிரம்ப் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பதால் சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு அச்சமான சூழல் நிலவுகிறது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் பலரும் கிடைத்த லாபத்திற்கு பங்குகளை விற்பனை செய்து விடுவோம் என பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதுவே பங்குச்சந்தைகளை சரிவுக்கு காரணமாகும்.
மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 3000 புள்ளிகளும், நிஃப்டி 22,000 புள்ளிகளுக்கு கீழும் சரிவை கண்டது. நிஃப்டி மெட்டல் 8 சதவீதமும், நிஃப்டி ஐடி 7 சதவீதமும், ஆட்டோ, ரியாலிட்டி மற்றும் ஆயில் மற்றும் கேஸ் பிரிவு 5 சதவீதமும் சரிவை கண்டது. ஸ்மால் கேப் நிறுவனங்கள் 10 சதவீதமும், மிட் கேப் நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் 7.3 சதவீதமும் குறைந்தன.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications