இந்தியாவின் மிகப்பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல்-ன் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி சில மாதங்களுக்கு முன்பு இப்பதவியில் இருந்து வெளியேறினர். இவர் வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியை அளித்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். யார் இந்த ஆர்எஸ்.சோதி, இவர் ஏன் மிகவும் முக்கியம்..?
ரீடைல் சந்தையில் குறிப்பாக பெரு நகரங்கள் முதல் சிறிய டவுன் மற்றும் கிராமம் வரையில் பொருட்களை கொள்முதல் செய்து அதை பிராசஸ் செய்து குறித்த நேரத்திற்குள் மக்களுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்பதில் அமுல் கில்லாடி. அந்நிறுவன வளர்ச்சிக்கு தூண் போல் இருந்தவர் தான் ஆர்.எஸ்.சோதி.

இந்திய ரீடைல் சந்தையை கட்டியாள வேண்டும் என்பதில் அப்பாவும் மகளும் திட்டமிட்டிருக்கும் நிலையில் முகேஷ் அம்பானி - ஈஷா அம்பானி கூட்டணி ரிலையன்ஸ் ரீடைல் கீழ் மளிகை பொருட்கள் முதல் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்கள் வரையில், சக போட்டி நிறுவனங்களை காட்டிலும் 30- 35 சதவீத குறைவான விலை விற்பனை செய்ய வேண்டும் என திட்டமிட்டு உள்ளது.
இதற்காக இந்தியா முழுவதும் விரிந்துள்ள ரிலையன்ஸ் ரீடைல் கடைகள், ஜியோமார்ட் கடைகள், ஜியோமார்ட் ஆன்லைன் தளம் என அனைத்தையும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. குளிர்பானத்திற்காக கேம்பா பிராண்டை வாங்கியது, சாக்லெட்-க்காக லோட்டஸ் நிறுவனம் என ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு நிறுவனத்தை வாங்கி வருகிறது ரிலையன்ஸ் ரீடைல் நிர்வாகம்.
இந்த நிலையில் மக்கள் ஒரு மாதத்தில் வாங்கும் மளிகை பொருட்களுக்காக Independence என்னும் brand-ஐ உருவாக்கி குஜராத்தில் முதல் கட்டமாக கடையை விரித்துள்ளது. இதற்கு அடுத்த படியாக காய்கறி மற்றும் பழங்கள் உள்ளது. இது தான் மிகப்பெரிய சவால், இதை சமாளிக்க தான் அமுல் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆர்எஸ் சோதியை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சேர்த்துள்ளது.

ஆர்.எஸ்.சோதி அனுபவம் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்த ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் வர்த்தக பிரிவை உருவாக்கி அதை மளிகை பொருட்கள் வணிகத்துடன் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதை சாத்தியப்படுத்த ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் ஆலோசகராக ஆர்.எஸ்.சோதி இணைக்கப்பட்டு உள்ளார்.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் ஆர்.எஸ்.சோதி ஆலோசகராக பணியில் சேர்ந்துள்ள நிலையில், பழங்கள் மற்றும் காய்கறிகள் பிரிவு வர்த்தகத்திற்கு ஏதுவாக விவசாயிகள் உடனான ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் இலக்குடன் இவர் பணியாற்ற உள்ளார். பழங்கள் மற்றும் காய்கறிகள் பிரிவுக்கு போதுமான வர்த்தக கட்டமைப்பு சப்ளை ஆகியவை கிடைத்தப் பின்பு இப்பிரிவு நேரடியாக மளிகை வணிகத்துடன் இணைக்கப்பட உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பால் பிராண்டான அமுல் பிராண்டை நிர்வாகம் செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பை (GCMMF) வழிநடத்தியவர் சோதி, சுமார் 40 ஆண்டுகள் அமுல் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். இவரின் ஆரம்பம் எங்கு எப்படி துவங்தியது தெரியுமா..?
அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி 2010 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தை நிர்வாகம் செய்து வந்த நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி இந்தத் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஆர்.எஸ்.சோதி-ஐ உயர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் ஜெயன் மேத்தா தற்காலிகமாக இப்பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அமுல் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ஆர்.எஸ்.சோதி 1982 ஆம் ஆண்டுச் சேல்ஸ் பிரிவில் உயர் அதிகாரியாகச் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து 2000-2004ல் மார்க்கெட்டிங் பிரிவில் பொது மேலாளராக இருந்தார், ஜூன் 2010 ஆம் ஆண்டு அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகப் பதவியேற்றார். 2017ல் இவருடைய பதவிக் காலம் 5 வருடம் நீட்டிக்கப்பட்டது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications