ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி புதன்கிழமை வைப்ரென்ட குஜராத் உச்சி மாநாட்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எப்போதும் ஒரு குஜராத்தி நிறுவனம் தான் என்று பேசிய நொடியில் இருந்து ரிலையன்ஸ் பங்குகள் உயர்வுடனே உள்ளது.
இதன் எதிரொலியாக ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் மதிப்பு முதல் முறையாக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டையும், முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு நீண்ட காலத்திற்குப் பின்பு 100 பில்லியன் டாலரை தாண்டி 102.3 பில்லியன் டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் மதிப்புப் புதன்கிழமை வர்த்தக முடிவில் 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதில் முக்கியமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் மதிப்பு வரலாற்று உச்ச அளவான 2658.95 ரூபாயை தொட்டு முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் பல நிறுவனங்கள் இருக்கும் வேளையில் இந்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் பெரும் பங்கீட்டை கொண்டு உள்ளது, கிட்டதட்ட 90 சதவீத மதிப்பீட்டைக் கொண்டு உள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 17.92 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
சமீபத்தில் முகேஷ் அம்பானி பெரும் கனவுடன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் 1.53 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஜியோ பைனான்சியல் தற்போது அமெரிக்காவின் பிளாக்ராக் உடன் இணைந்து மியூச்சவல் பண்ட் வர்த்தகத்தில் இறங்கத் திட்டமிட்டு இதற்கான உரிமத்தை பெற காத்திருக்கிறது.
2015 முதல் ஒவ்வொரு வருடமும் லாபத்தைக் கொடுத்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2023ல் 11 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது, 2014ல் 0.5 சதவீத இழப்பைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்3.07 சதவீத உயர்வில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி-யின் 5 வாக்குறுதி.. மோடி செம ஹேப்பி..!! ரிலையன்ஸ் ஒரு குஜராத்தி நிறுவனம்..!
இன்றைய வர்த்தக முடிவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு என்ன தெரியுமா..?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - 17.93 லட்சம் கோடி ரூபாய்
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் - 1.53 லட்சம் கோடி ரூபாய்
Network18 - 12,500 கோடி ரூபாய்
TV18 ஒளிபரப்பு - 11,040 கோடி ரூபாய்
SW சோலார் - 10,386 கோடி ரூபாய்
அலோக் இண்டஸ்ட்ரீஸ் - 18,619 கோடி ரூபாய்
ஜெஸ்ட் டயல் - 7,141 கோடி ரூபாய்
ஹாத்வே கேபிள் & டேட்டாகாம் - 4,407 கோடி ரூபாய்
டென் நெட்வொர்க்ஸ் - 3,123 கோடி ரூபாய்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ரா - 2,136 கோடி ரூபாய்
ஹாத்வே பவானி கேபிள்டெல் - 16.95 கோடி ரூபாய்
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications