இந்தியப் பங்குச் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகளின் மதிப்பு இன்று வரலாறு காணாத பெரும் சரிவை சந்தித்தது. ஜூன் 3 ஆம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ரூ.3,029 என்ற உச்சபட்ச விலையை எட்டியிருந்த நிலையில், இன்று பங்குச்சந்தையில் 11% சரிவைச் சந்தித்தன. இதன் காரணமாக, நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி வரையில் குறைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2719.33 ரூபாய் என்ற மோசமான நிலைக்கு சரிந்தாலும், வர்த்தகம் முடியும் போது 7.53 சதவீதம் சரிந்து 2793.60 ரூபாய் அளவில் உள்ளது.

முன்னதாக, ஜூன் 3 ஆம் தேதி ரூ.3,029 என்ற உச்ச விலையை எட்டியிருந்த நிலையில், இன்று ரூ.18.50 லட்சம் கோடியாக RIL நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சரிந்துள்ளது என்று தகவல்.
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் மற்றொரு கிளை நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் 6.54 சதவீதம் வரையில் சரிவுடன் முடிந்ததுள்ளது. ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் இன்று 307.05 ரூபாய் என்ற மோசமான நிலைக்கு சென்றாலும் வர்த்ததகம் முடியும் போது 332.80 ரூபாய் விலையிலும், 2.11 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டிலும் முடிந்துள்ளது.
லோக் சபா தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பிற்கு தலைகீழாக இருக்கும் வேளையில், பங்குச் சந்தையில் நிலவும் மந்த நிலைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்த தெளிவின்மை காரணமாக, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 6,000 புள்ளிகளுக்கும் மேல் சரிவைக் கண்டது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையில் 2,000 புள்ளிகள் வரை சரிவு காணப்பட்டது. இந்தச் சரிவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நிதி நிறுவனப் பங்குகளின் பங்கு அதிகம் இருந்தது.
குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசி வங்கி ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்குகள் மட்டும் சென்செக்ஸ் குறியீட்டில் 2012 புள்ளிகள் சரிவுக்குக் காரணமாக அமைந்தன.
இதனைத் தொடர்ந்து, Larsen & Toubro (L&T), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), என்.டி.பி.சி (NTPC), பவர் கிரிட் (Power Grid) போன்ற நிறுவனங்களின் பங்குகளின் சரிவும் சென்செக்ஸ் குறியீட்டின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தன.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 4389.73 புள்ளிகள் சரிந்து 72,079.05 புள்ளிகளை அடைந்துள்ளது. சென்செக்ஸ் குறியீடின் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் அதிகப்படியாக 6.00 சதவீதம் உயர்ந்துளளது. இதை தொடர்ந்து நெஸ்லே, டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், சன் பார்மா ஆகியவை மட்டும் உயர்வுடன் முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications