தமிழ்நாட்டை டார்கெட் செய்யும் முகேஷ் அம்பானி.. அடுத்தடுத்து ரிலையன்ஸ் முக்கிய அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மற்றும் ஆசியாவின் 2வது பெரிய பணக்காரர் ஆக இருக்கும் முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் நிலையில், கொரோனாவுக்குப் பின்பு தமிழ்நாட்டைப் பிரத்தியகேமாக டார்கெட் செய்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறார்.

2016ல் ஜியோ வெற்றிக்குப் பின்பு ரீடைல் வர்த்தகத்தையும், உற்பத்தித் துறையை முக்கியமானதாகக் கொண்டு இயங்கி வரும் ரிலையன்ஸ்-க்கு தமிழ்நாடு முக்கியமான டார்கெட் ஆக மாறியுள்ளது.

2020 முதல் தமிழ்நாட்டை மையமாக வைத்து முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் என்னவெல்லாம் செய்துள்ளது பாருங்க.

முகேஷ் அம்பானி-யின் DNA loop திட்டம்.. மாட்டிக்கிட்டா வெளியே வர முடியாது.. உஷார் மக்களே..! முகேஷ் அம்பானி-யின் DNA loop திட்டம்.. மாட்டிக்கிட்டா வெளியே வர முடியாது.. உஷார் மக்களே..!

ஜெய்சூர்யாஸ்

ஜெய்சூர்யாஸ்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் தமிழ்நாட்டில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகக் கொங்கு மண்டலத்தை முக்கிய வர்த்தகப் பகுதியாகக் கொண்டு இயங்கும் ஜெய்சூர்யாஸ் கடைகளை 2020 ஆம் ஆண்டில் சுமார் 152 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது தான்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

முகேஷ் அம்பானியின் தமிழ்நாட்டு வர்த்தகத்தின் டார்கெட் துவக்கம் இதுதான். இதைத் தொடர்ந்து தென்னிந்திய வர்த்தகச் சந்தைக்குள் நுழைய முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தீவிரமான முயற்சியில் இறங்கியது.

 சலூன் வர்த்தகம்
 

சலூன் வர்த்தகம்

இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் தொடர்ந்து வர்த்தக விரிவாக்கத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது சென்னை Naturals Salon & Spa நிறுவனத்தின் வாயிலாகச் சலூன் வர்த்தகத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.

CK குமரவேல்

CK குமரவேல்

Naturals Salon & Spa நிறுவனத்தின் சிஇஓ-வான CK குமரவேல் தனது லின்கிடுஇன் கணக்கில் 20 மாநிலத்தில் 700 சலூன்களை வைத்து இயங்கும் நெட்வொர்க் ரிலையன்ஸ் ரீடைல் உடன் இணைந்து கிளை எண்ணிக்கையை 4 முதல் 5 மடங்கு வரையில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 49 சதவீத பங்குள்

49 சதவீத பங்குள்

மேலும் Naturals Salon & Spa நிறுவனத்தில் 49 சதவீத பங்குளை கைப்பற்ற உள்ளதாகவும் CK குமரவேல் தனது லின்கிடுஇன் பதிவில் தெரிவித்து இருந்தார். இந்த 49 சதவீத பங்குகளை எவ்வளவு தொகைக்கு வாங்கப்படுகிறது என்பதை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது FMCG வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யச் சந்தையில் இருக்கும் நிறுவனங்களை வாங்கி அதை வேகமாக விரிவாக்கம் செய்து வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளது.

கார்டன் நம்கீன்ஸ்

கார்டன் நம்கீன்ஸ்

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கவின்கேர் குழுமத்தின் கார்டன் நம்கீன்ஸ் பிராண்டையும் அதன் வர்த்தகத்தையும் கைப்பற்றித் தனது FMCG வர்த்தகப் பிரிவில் இணைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

தென்னிந்தியா

தென்னிந்தியா

ரிலையன்ஸ் வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலத்தில் தனது ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்திருந்தாலும், தென்னிந்திய மாநிலத்தில் சற்றுக் குறைவு தான், இதைச் சரி செய்யும் வகையில் தமிழ்நாடு, கேரளா-வில் அடுத்தடுத்து வரத்தகக் கைப்பற்றும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

கவின்கேர் குழுமம்

கவின்கேர் குழுமம்

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கவின்கேர் குழுமத்திற்குச் சொந்தமான கார்டன் நம்கீன்ஸ் பிராண்ட் முறுக்கு, மிக்சர் போன்ற தின்பண்டங்களைச் சொந்தமாகத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 2000 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்நிறுவனம் சுமார் 20க்கும் அதிகமான ஸ்னாக்ஸ் வகைகளை விற்பனை செய்து வருகிறது.

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி

மத்திய அரசு சீனாவுக்கு இணையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் உற்பத்தி திட்டங்களும், நிறுவனங்களும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் இந்தியாவில்ல இத்துறை வேகமாக வளர்ச்சி அடையும் முக்கியத் துறையாக மாறியுள்ளது.

டாடா குழுமம்

டாடா குழுமம்

தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் பல தைவான் நிறுவனங்கள் வந்துள்ளது. டாடா குழுமம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலையை உருவாகி விரைவில் 4500க்கும் அதிகமானோரை பணியில் அமர்த்தி உற்பத்தியை துவங்க உள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி


இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான RSBVL மற்றும் அமெரிக்காவின் சன்மினா கார்ப்ரேஷன் சென்னையில் புதிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தளத்தை அமைக்கப் பல மாதங்களுக்கு முன்பே கூட்டணி நிறுவனத்தை உருவாக்க முடிவு செய்த நிலையில், தற்போது வெற்றிகரமாகக் கூட்டணி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

RSBVL மற்றும் சன்மினா கார்ப்ரேஷன்

RSBVL மற்றும் சன்மினா கார்ப்ரேஷன்

RSBVL மற்றும் சன்மினா கார்ப்ரேஷன் கூட்டணி நிறுவனம் சுமார் 3300 கோடி ரூபாய் முதலீட்டுத் தொகையில் சென்னை-யில் சன்மினா கார்ப்ரேஷன் வைத்திருக்கும் 100 ஏக்கர் நிலத்தில் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.

 3300 கோடி ரூபாய் முதலீடு

3300 கோடி ரூபாய் முதலீடு

RSBVL மற்றும் சன்மினா கார்ப்ரேஷன் மத்தியிலான கூட்டணி நிறுவனத்தில் Reliance Strategic Business Ventures Limited (RSBVL) 50.1 சதவீத பங்குகளையும், அமெரிக்காவின் சன்மினா கார்ப்ரேஷன் 49.9 சதவீத பங்குகளையும் கொண்டு இயங்க உள்ளது.

தேடி தேடி ஆடம்பர வீட்டை வாங்கும் இந்திய தொழிலதிபர்கள்.. ஒரு வீடு ரூ.1000 கோடியாம்..! தேடி தேடி ஆடம்பர வீட்டை வாங்கும் இந்திய தொழிலதிபர்கள்.. ஒரு வீடு ரூ.1000 கோடியாம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani owned reliance industries targetting tamilnadu for business expansion

Mukesh Ambani owned reliance industries targetting Tamilnadu for business expansion
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X