இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நாட்டின் முன்னணி ரீடைல் வர்த்தத சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் ரீடைல், புதிதாக குவிக் காமர்ஸ் துறையில் இறங்கி பெரும் வர்த்தகத்தைக் கைப்பற்றும் இலக்குடன் களமிறங்கியுள்ளது.
முக்கிய அம்சங்கள்: ரிலையன்ஸ் ரீடைல் தனது ஜியோமார்ட் தளத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களை ஒரு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யும் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சோதனை முயற்சி தற்போது மும்பை மற்றும் நவி மும்பை பகுதிகளில் மட்டும் நடந்து வருகிறது.
வெற்றி பெற்றால், சேவை விரிவுபடுத்தப்பட்டு டெலிவரி நேரம் 30-45 நிமிடங்களாகக் குறைக்கப்படலாம்.
ரிலையன்ஸ் டன்சோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது, இதனை மொத்தமாகக் கைப்பற்றி Blinkit, Swiggy Instamart, Zepto போன்ற நிறுவனங்களுடன் போட்டிப்போட வாய்ப்புள்ளது.

சவால்கள்: Blinkit, Swiggy Instamart, Zepto போன்ற ஏற்கனவே நிலைபெற்றுள்ள நிறுவனங்களுடன் கடுமையான போட்டி. டெலிவரி கட்டணம் இல்லை என்றாலும் தாமதம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். ஹைபர்லோகல் டெலிவரி சேவையை மார்க்கெட்டிங் செய்ய பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications