ரூ.20000 கோடி பணத்திற்கு மெகா பிளான் போடும் முகேஷ் அம்பானி.. ஈஷா அம்பானி மாஸ்டர் மைண்ட்..!

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் 2.5 பில்லியன் டாலர்கள் முதலீட்டை அதிகரிக்க உலகளவில் பல்வேறு முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த அளவு முதலீட்டை எட்டும் விதத்தில் காரியங்கள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

இந்த 2.5 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டும் திட்டம் ரிலையன்ஸ் ரீடைலின் 3.5 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டும் திட்டத்தின் ஒரு பங்குதியாகும். இதில் ஒரு பகுதியாக கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி (QIA) 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளதாக கடந்த மாதம் அறிவித்திருந்தது.

ரூ.20000 கோடி பணத்திற்கு மெகா பிளான் போடும் முகேஷ் அம்பானி..  ஈஷா அம்பானி மாஸ்டர் மைண்ட்..!

இது தொடர்பாக ரிலையன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், நிறுவனத்தின் கொள்கையின் ஒரு பகுதியாக ஊடக யூகங்கள் மற்றும் வதந்திக்கு இடமளிக்கும் வகையில் எந்த கருத்துகளையும் தெரிவிக்கப்போவதில்லை. எங்களது நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகளில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றோம் எனக் கூறப்பட்டுள்ளது.

QIA நிறுவனத்திடம் இருந்து 1 பில்லியன் டாலர் முதலீடு பெற்றதாக ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. இந்தியாவின் மிகப் பெரிய ரீடைல் நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் ரீடைல் பலசரக்கு சாமான்களில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரை அந்நிய நிறுவனங்களான பர்பெர்ரி, பிரெட் ஏ மாங்கர் போன்றவற்றுடன் கூட்டு வைத்து செயல்படுகிறது.

இந்த விஷயத்தில் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் ரிலையன்ஸுக்கு அறிவுரை வழங்குவதாக கூறப்படுகிறது. மோர்கன் ஸ்டான்லி இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. தகவல் அறிந்த மூன்று தரப்புகளும் இதில் முதலீடு செய்யும் முக்கிய முதலீட்டாளர்கள் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

ஆனால் முதல் ஆதாரம், ரிலையன்ஸ் குறைந்தபட்சம் இரண்டு அமெரிக்க முதலீட்டாளர்களுடன் பேசுவதாகக் கூறியது, மற்ற இரண்டு ஆதாரங்கள் ரிலையன்ஸின் தற்போதைய வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து சில sovereign wealth fund மூலம் முதலீடு வரும் எனக் கூறியது.

இந்த முதலீடு திட்டமிட்டபடி வந்து சேர்ந்தால் மேலைநாட்டு தனியார் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை பிரகாசமடையச் செய்யும். சீனாவின் மோசமான பொருளாதார சூழ்நிலை மற்றும் பல காரணங்களால் அங்கு முதலீடு செய்வதற்கு மேலைநாட்டு தனியார் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டிவரும் நிலையில் இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ரீடைல் 5.71 பில்லியன் டாலர்களை தனது 10.09 சதவீத பங்குகளை விற்றதன் மூலம் ஈட்டியது. இந்த பங்குகள் Saudi Public Investment Fund, General Atlantic, United Arab Emirates' Mubadala ஆகிய நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன.

2020 நிதி திரட்டல் வணிகத்தின் மதிப்பை சுமார் $52 பில்லியன் என்று முகேஷ் அம்பானி இந்த வாரத்தில் கூறினார், மேலும் மூன்று ஆண்டுகளுக்குள், சில்லறை விற்பனையின் மதிப்பீடு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே இரண்டு வாரங்களுக்குள் இரண்டு ரிலையன்ஸ் நிதி திரட்டும் அறிவிப்புகள் வரலாம் என்றும், QIA முதலீடு செய்ததைப் போலவே நிறுவனத்தின் மதிப்பீடும் சுமார் $100 பில்லியனாக இருக்கும் என்றும் நேரடி தகவல் அறிந்த நான்காவது ஆதாரம் கூறியது. அதாவது $2.5 பில்லியன் முதலீடு என்பது நிறுவனத்தின் 2.5% பங்குக்கு சமமாக இருக்கும்.

இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் வருடாந்திர ஜெனரல் மீட்டிங்கில், பல மார்க்யூ குளோபல் ஸ்ட்ராஜிக் மற்றும் நிதி முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் ரீடெய்ல் மீது வலுவான ஆர்வத்தை காட்டியுள்ளனர். அவர்களுடன் எங்களின் முன்னேற்றம் குறித்து உரிய நேரத்தில் உங்களுக்கு அறிவிப்பேன்" என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் தங்களது குழுமம் ரீடைல் தொழிலை ஐந்து ஆண்டுகளுக்குள் பட்டியலிடப்போவதாகக் கூறியிருந்தார்.
அம்பானியின் மகள் இஷா அம்பானி சில்லறை விற்பனை விரிவாக்கத்தில் முனைப்புடன் செயல்படுகிறார்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் தற்போது 18,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது, அதேவேளையில் அமேசான் மற்றும் வால்மார்ட்டின் பிளிப்கார்ட் போன்றவற்றுடன் போட்டியிடும் இ-காமர்ஸ் செயல்பாடும் வளர்ந்து வருகிறது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் 2.6 டிரில்லியன் ரூபாய் வருவாயில் மார்ச் 2023 இல் முடிவடைந்த நிதியாண்டில் மட்டும் 91.81 பில்லியன் இந்திய ரூபாய் ($1.11 பில்லியன்) நிகர லாபத்தை அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு முதல், யூனிலீவர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ஐந்து ஆண்டுகளுக்குள் $6 பில்லியன் வருடாந்திர விற்பனையை தரும் நுகர்வோர் வணிகத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இதற்காக, டஜன் கணக்கான சிறிய மளிகை மற்றும் உணவு அல்லாத பிராண்டுகளை வாங்குவதன் மூலம் ரிலையன்ஸ் ரீடெய்ல் தனது நுகர்வோர் வணிக சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+