கத்தார் நாட்டின் சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனமான கத்தார் முதலீட்டு ஆணையம் (QIA) முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து சிறிய அளவிலான பங்குகளை பெற திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் காலாண்டு முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தை காப்பாற்றியதே ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தான், ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் வருவாய் 20 சதவீதம் உயர்ந்துள்ளது, இதன் மூலம் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் ரீடைல் பிரிவின் வருவாய் 69,948 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் வரலாற்றில் 69,948 கோடி ரூபாய் வருவாய் அளவீடு தான் வரலாற்று உச்சம். ஜூன் காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் ரீடைல் சுமார் 555 கடைகளைத் திறந்துள்ளது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் முகேஷ் அம்பானி பங்குகளை விற்பனை செய்த முதலீட்டை ஈர்ப்பாரா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. காரணம் ரிலையன்ஸ் O2C பிரிவில் வர்த்தகம் மோசமாக இருக்கும் வேளையிலும் சவுதி ஆரம்கோ இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கும் வேளையிலும் கத்தார் முதலீட்டு ஆணையம் (QIA) முதலீட்டை O2C பக்கம் திருப்ப தான் முகேஷ் அம்பானி திட்டமிடுவார்.
மறுமுனையில் ரிலையன்ஸ் தனது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பிரிவின் Demerger மூலம் வெற்றியை கண்டுள்ள நிலையில் அடுத்தடுத்து ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனத்தையும் தனியாக பிரிக்கும் முயற்சியில் முகேஷ் அம்பானி உள்ளார்.
தற்போது கிடைத்துள்ள தகவல் படி கத்தார் முதலீட்டு ஆணையம் (QIA) ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்து சுமார் 1 சதவீத பங்குகளை வாங்கலாம் என பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும்.
இது முகேஷ் அம்பானியின் Demerger திட்டத்திற்கு பெரிய அளவில் பலன் அளிக்கும் என்பதால் இதை ஏற்கவும் வாய்ப்புகள் உள்ளது, ஆனால் ஐடிசி தனது சமீபத்தில் Demerger முடிவு மூலம் பங்கு மதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டதும் Demerger திட்டத்தில் இருக்கும் பிரச்சனையை காட்டுகிறது.
ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் மளிகை பொருட்கள், பேஷன் மற்றும் லைப்ஸ்டைல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ரீடைல் வர்த்தகம் உள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் தான் Ajio, JioMart மட்டும் அல்லாமல் பல்வேறு ஆடை விற்பனை பிராண்டுகள், பியூட்டி பொருட்கள் விற்பனை பிராண்டுகளும் உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனம் தற்போது ஈஷா அம்பானி, முகேஷ் அம்பானி நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஈஷா அம்பானி நிர்வாகத்தின் கீழ் ரிலையன்ஸ் ரீடைல் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஜேபி மோர்கன் ரிலையன்ஸ் ரீடைல் என்டர்பிரைசஸ்-க்கு 112 பில்லியன் டாலர் மதிப்பீட்டும், ஈக்விட்டி மதிப்பாக 102 பில்லயன் டாலர் மதிப்பீட்டை கொடுத்துள்ளது. UBS 110 பில்லியன் டாலரும், Bernstein 111 பில்லியன் டாலரும், JM Financial 105 பில்லியன் டாலர் மதிப்பீடு கொடுத்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications