மும்பை: ரூ.20 கோடி தாங்க இல்லையென்றால் உங்களை சுட்டு கொன்று விடுவோம் என்று இமெயில் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் மெகா கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். அம்பானி குடும்பத்தினருக்கு எதிராக அச்சுறுத்தல் உள்ளதே இதற்கு காரணம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவரது வீட்டுக்கு அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஸ்கார்பியோ கார் ஒன்று நின்றிருந்தது. ஆனால் நல்ல வேளையாக வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. அதேசமயம் இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று முகேஷ் அம்பானிக்கு ஒரு கொலை மிரட்டல் வந்துள்ளது. முகேஷ் அம்பானிக்கு மர்ம நபர்கள் இமெயில் மூலம் விடுத்துள்ள கொலை மிரட்டலில், ரூ.20 கோடி தர வேண்டும் தர தவறினால் சுட்டு கொன்று விடுவோம் என்று அச்சுறுத்தியுள்ளனர். இதனையடுத்து முகேஷ் அம்பானி தரப்பு இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தனர். மும்பை காம்தேவி காவல்நிலைய போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு ஐ.பி.சி. 387 மற்றும் 506 (2) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானிக்கு இமெயில் வாயிலாக விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சி.ஆர்.பி..எஃப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைதான் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
முதலில் அம்பானி குடும்பத்துக்கு இசட் பிரிவு பாதுகாப்புதான் வழங்கப்பட்டது. ஆனால் அம்பானி குடும்பத்துக்கு எதிராக அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்தது. இதனையடுத்து அம்பானி குடும்பத்துக்கான பாதுகாப்பு இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பாக உயர்த்தப்பட்டது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications