இந்தியா போன்ற மிகப்பெரிய நுகர்வோர் சந்தையில் வீட்டு உபயோக பொருட்களுக்கான சந்தை எப்போதும் குறையாது. இதை உணர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வாயிலாக இந்தியாவில் நீண்ட காலமாக வொயிட் குட்ஸ் பிரிவில் இருக்கும் BPL, கெல்வினேட்டர் ஆகிய இரு முக்கியமான பிராண்டுகளைக் கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையில் இறங்க உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் தற்போது செய்துள்ள ஒப்பந்தம் மூலம் BPL, கெல்வினேட்டர் ஆகிய இரு இந்திய பிராண்டுகளின் பெயரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யவும், சந்தைப்படுத்தவும் உரிமம் பெற்று உள்ளது.
வொயிட் குட்ஸ் பொருட்கள்
இந்தியாவில் தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தையில் வொயிட் குட்ஸ் பொருட்களுக்கு அதிகளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது. இதேபோல் சீனாவில் இருந்து அதிகளவிலான பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் இரு வர்த்தக வாய்ப்புகளையும் தீர்க்கும் வண்ணம் முகேஷ் அம்பானி BPL, கெல்வினேட்டர் ஆகிய இரு இந்திய பிராண்டுகளின் உரிமத்தை கைப்பற்றியுள்ளார்.
கெல்வினேட்டர்
BPL, கெல்வினேட்டர் ஆகிய இரு இந்திய பிராண்டுகளின் கீழ் தயாரிக்கப்படும் பொருட்களை இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் மார்கெட்டிங் செய்து உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்திய பிராண்டுகள்
இதன் மூலம் இவ்விரு இந்திய பிராண்டுகள் மீட்டு எடுப்பது மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் ரீடைல் மூலம் இந்தப் பிராண்டுகளில் பொருட்களைக் கடைகள் முதல் ஆன்லைன் வரை அனைத்து பிரிவிலும் வர்த்தகப்படுத்த முடியும் சந்தைப்படுத்த முடியும்.
முக்கியப் பொருட்கள் தயாரிப்பு
இந்தக் கூட்டணியில் ரிலையன்ஸ் BPL நிறுவனத்தின் ஏசி, பிரிட்ஜ், வாசிங் மெஷின், டிவி, ஃபேன், லைட் பல்பு ஆகியவற்றைத் தயாரிக்க உள்ளது. அது மட்டும் அல்லாமல் தீபாவளி பண்டிகையின் போது இக்கூட்டணியில் உருவான பொருட்களைச் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் ரீடைல்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications