இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 2020ல் அதிகளவிலான முதலீட்டை ஈட்டிய காரணத்தாலும், அதிகளவிலான லாபத்தை ஒவ்வொரு காலாண்டிலும் பெற்று வரும் காரணத்தாலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் இதற்கு முன் மளிகை பொருட்கள், எட்-டெக், மியூசிக், ஈ-பார்மசி, பேமெண்ட்ஸ், பேஷன், பர்னிச்சர் துறை சார்ந்த நிறுவனங்களை வாங்கிய நிலையில் தற்போது உணவு துறையில் ஒரு அமெரிக்க நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளார்.
QSR பிரிவில் முகேஷ் அம்பானி
இந்தியாவில் QSR பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து, பெரிய அளவிலான லாபத்தையும், பங்குச்சந்தையில் சிறப்பான வரவேற்பையும் பெற்று வரும் நிலையில், முகேஷ் அம்பானி தனது பிரம்மாண்ட ரீடைல் வர்த்தகத் திட்டத்தில் உணவு விற்பனை துறையையும் சேர்க்க முடிவு செய்துள்ளார் .
சப்வே நிறுவனம்
QSR என்றால் Quick Service Restaurant உதாரணமாகக் கேஎப்சி, டாமினோஸ், பிட்சா ஹட் போன்ற. இத்துறை வர்த்தகத்தில் இறங்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் மிகவும் பிரபலமான இந்தியாவில் அதிகம் விரிவாக்கம் செய்யப்படாத சப்வே நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
250 மில்லியன் டாலர்
இந்தியாவில் சிங்கிள்பிராண்ட் நிறுவனமாக இயங்கி வரும் சப்வே நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை 200 முதல் 250 மில்லியன் டாலர் வரையிலான தொகைக்கு அதாவது 1488 முதல் 1860 கோடி ரூபாய் அளவிலான தொகைக்கு வாங்க இரு தரப்புக்கு மத்தியிலும் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நிறுவனம்
அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் பிராந்தியம் வாயிலாகப் பிரான்சைஸ் முறையில் வர்த்தகம் செய்து வருகிறது சப்வே. மேலும் சப்வே தற்போது அதன் சிஇஓ ஜான் சிட்சி தலைமையில் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
சப்வே சிஇஓ ஜான் சிட்சி
கொரோனா காலத்தில் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் ஜான் சிட்சி தலைமையிலான சிப்வே நிறுவனம் செலவுகளைக் குறைக்கவும், ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கவும், வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யவும் முடிவு செய்துள்ளது.
600 சப்வே கடைகள்
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ரிலையன்ஸ் மற்றும் சப்வே எவ்விதமான கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் இருக்கும் 600 சப்வே கடைகளைப் பெறும்.
வர்த்தகப் போட்டி
QSR பிரிவில் ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ரீடைல் வரும் போது இத்துறையில் போட்டி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். ஏற்கனவே இப்பிரிவில் கடுமையான போட்டி இருக்கும் நிலையில் ரிலையன்ஸ் வருகை மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
டாடா vs ரிலையன்ஸ்
இந்தியாவில் டாடா குரூப் அமெரிக்காவின் முன்னணி காஃபி பிராண்டான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் நிலையில், இதே உணவு துறையில் தற்போது சப்வே மூலம் ரிலையன்ஸ் டாடா உடன் போட்டிப்போடத் தயாராகியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications