'கிஷோர் பியானி-க்கு' அம்பானி போட்ட பயங்கரமான கன்டிஷன்..?! 15 வருடத்திற்கு 'No Entry'

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் தனது வர்த்தகத்தை நாடு முழுவதும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு வரும் நிலையில், அதீத கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் கிஷோர் பியானி-யின் பியூச்சர் குரூப் நிறுவனத்தின் மொத்த ரீடைல் வர்த்தகத்தை பல தடைகளுக்கு பின் சுமார் 24,713 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ளது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்.

பியூச்சர் குரூப் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் கட்டுப்பாட்டிற்குப் புதிதாக 1,800 ரீடைல் கடைகளும், வருடத்திற்கு 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகமும் கிடைத்துள்ளது.

இந்த முக்கியமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, பியூச்சர் குரூப் நிறுவனருக்கு முக்கியமான ஒரு கன்டிஷன் போட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

அது என்ன தெரியுமா..?? வாங்க பார்ப்போம்..!

ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப்

ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப்

முகேஷ் அம்பானின் ரிலையன்ஸ் ரீடைல் - கிஷோர் பியானி பியூச்சர் குரூப் இடையிலான ஒப்பந்தம் மூலம் கிஷோர் பியானி கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் இருந்து வெளியேறியுள்ளார். இதேபோல் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கும் மிகவும் குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான வர்த்தக விரிவாக்கம் மற்றும் அதிகளவிலான வருவாய் கிடைக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருக்கும் ஒரு முக்கியமான கன்டிஷன் கிஷோர் பியானி-க்கும் அவரது குடும்பத்திற்கும் பெரும் தடையாக விளங்குகிறது.

 

கன்டிஷன்

கன்டிஷன்

இரு நிறுவனங்களுக்கு மத்தியில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் கிஷோர் பியானியோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களோ அடுத்த 15 வருடத்திற்கு ரீடைல் வர்த்தகப் பிரிவுக்குள் வர்த்தகத்தைத் துவங்க கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக, இதுகுறித்து அறிந்த இருவர் எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கைக்குத் தெரிவித்துள்ளனர்.

ஒரு வர்த்தகம் மட்டும்

ஒரு வர்த்தகம் மட்டும்

இந்த ஒப்பந்தத்தின் படி ரிலையன்ஸ் ரீடைல் தற்போது இருக்கும் எந்த வர்த்தகத்திலும் கிஷோர் பியானியோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களோ அடுத்த 15 வருடத்திற்கு ரீடைல் வர்த்தகத்தைத் துவங்கக் கூடாது. அதுவும் குறிப்பாக ஆன்லைன், ஆப்லைன் போன்ற எவ்விதமான வர்த்தகத்திற்குள் நுழையக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் ரீடைல் தற்போது ஹோம் ரீடைல் பிரிவில் இல்லாத காரணத்தால் இத்துறையில் கிஷோர் பியானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வர்த்தகச் செய்யலாம்.

 

ஹோம்டவுன்

ஹோம்டவுன்

பியானியிடம் தற்போது Praxis Retail என்னும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் தான் ஹோம் ரீடைல் வர்த்தக நிறுவனமான 48 ஹோம் டவுன் ஸ்டோர்ஸ் இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்த 48 ஹோம் டவுன் ஸ்டோர்ஸ் மூலம் கடந்த வருடம் 702 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது. இந்த வர்த்தகம் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

15 வருடம்

15 வருடம்

பொதுவாக இதுப்போன்ற ஒப்பந்தத்தில் 3 முதல் 5 ஆண்டுகள் வரையில் மட்டுமே நிபந்தனை விதிக்கப்படும், ஆனால் கிஷோர் பியானியின் நிதி நிலை முகேஷ் அம்பானிக்குச் சாதகமாக இருந்த காரணத்தால் 15 வருடம் என்ற மிகப்பெரிய காலகட்டத்தைச் சாதகமாக்கி கொண்டது ரிலையன்ஸ் ரீடைல்.

மேலும் இந்த நிபந்தனை குறித்து இரு தரப்பும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+