அதானி குழும பங்குகளின் தொடர் வீழ்ச்சி காரணமாக ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற முக்கியமான இடத்தை முகேஷ் அம்பானி படித்துவிட்டார். இந்திய வர்த்தகம் மற்றும் முதலீட்டு சந்தை அதிகளவிலான தடுமாற்றம் ஏற்படும் வேளையில் வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் மிகவும் எச்சரிக்கை உடன் புதிய முதலீடுகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், ரிலையன்ஸ் ரீடைல் அடுத்த 2 வருடத்தில் உலகின் மிகப்பெரிய ஆடை விற்பனை நிறுவனமாக உருவெடுக்க உள்ளதாக தெரிகிறது.
உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உயர்ந்துள்ளது, இந்த நிலையில் இந்தியாவில் ஆடைகளுக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் ஆடை பிரிவில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என கணிக்கப்பட்டு உள்ளது.
நுகர்வோர் மனநிலை
எந்தொரு நாடாக இருந்தாலும் நுகர்வோர் செலவிடம் அளவு நாட்டின் வளர்ச்சி அளவீட்டை பொருத்தே அமையும், அந்த வகையில் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது என ரிலையன்ஸ் பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் தலைமை அதிகாரி அகிலேஷ் பிரசாத் கூறுகிறார். இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கும் வேளையில், இதனால் வர்த்தக வளர்ச்சியில் எவ்விதமான பாதிப்பும் இல்லா என்றும் கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் தனது ஆடை விற்பனைக்காக இந்தியா முழுவதும் 4000 பேஷன் மற்றும் ஆடை விற்பனை கிளைகளை வைத்துள்ளது. இதில் ரிலையன்ஸ் டிரென்ஸ், Centro, Azorte மற்றும் Fashion Factory ஆகியவை அடக்கம். ஆடை விற்பனை பிரிவில் இந்தியாவில் முன்னோடியாக உள்ளது.
430 மில்லியன் ஆடைகள் விற்பனை
2022 ஆம் ஆண்டில் மட்டும் ரிலையன்ஸ் ரீடைல் சுமார் 430 மில்லியன் ஆடைகள் விற்பனை செய்துள்ளது. இது ஒட்டுமொத்த அமெரிக்கா, கனடா மக்கள்தொகைக்கு போதுமானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தற்போது இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆடைகள் விற்கும் ரிலையன்ஸ் ரீடைல் அடுத்த 2 வருடத்தில் உலகிலேயே அதிக ஆடைகளை விற்கும் பிரண்டாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
17 சதவீத வருடாந்திர வளர்ச்சி
ஆடை முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் ரிலையன்ஸ் ரீடைல் கடந்த 10 வருடத்தில் சராசரியாக 17 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்து வருகிறது. கடந்த 5 வருடத்தில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் வளர்ச்சி அதிகளவில் பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் சார்ந்து உள்ளது, இப்பிரிவு மட்டும் 43 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை தொடர்ந்து மளிகை பொருட்கள் 41 சதவீதம்.
முக்கிய கடைகள்
மேலும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் ஆடை விற்பனை பிரிவு லாபம் மட்டும் 24 சதவீதமாகும். இது பிற பிரிவுகளை காட்டிலும் மிகவும் அதிகம் என இந்நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் முழுவதும் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் Centro, Azorte, Avantra மற்றும் Fashion Factory ஆகிய கடைகளை விரிவாக்கம் செய்து வருகிறது.
2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்கள்
இது மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் ரீடைல் தனது வர்த்தகத்தை பெரு நகரங்களை மட்டும் சார்ந்து இருக்காமல், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகம் வேகமாக உயரும் என கணிக்கப்படுகிறது. பெரு நகரங்களில் ஒரு பிராண்டெட் கடை வருவதற்கும் சிறிய நகரம், டவுன் பகுதியில் ஒரு பிராண்டெட் கடை வருவதற்கு பெரும் வித்தியாசம் உள்ளது.


Click it and Unblock the Notifications