ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் அடுத்த தலைவர் யார்..? கடைசி 5 வருடம்.. வாரிசுகள் மத்தியில் கடும் போட்டி..?

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் தலைவர் முகேஷ் அம்பானி 2029 ஆம் ஆண்டு வரையில் இக்குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அடுத்த ஐந்தாண்டு காலம் தொடர பங்குதாரரின் ஒப்புதலுக்கு நிர்வாக குழு சமர்ப்பித்துள்ளது.

66 வயதான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தொடர சட்டப்படி 70 வயது வரையில் மட்டுமே அனுமதி உள்ளது. 66 வயதான நிலையில் அடுத்த 5 வருடம் தொடர வேண்மெனில் வயது வரம்பை மீறி முகேஷ் அம்பானி நியமிக்கப்படுவதற்கு பங்குதாரர்களின் சிறப்புத் தீர்மானம் கட்டாயம் தேவை.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் அடுத்த தலைவர் யார்..? கடைசி 5 வருடம்.. வாரிசுகள் மத்தியில் கடும் போட்டி..?

இதை செயல்படுத்தவே 2029 ஆம் ஆண்டு வரையில் முகேஷ் அம்பானி இக்குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அடுத்த ஐந்தாண்டு காலம் தொடர பங்குதாரரின் ஒப்புதலுக்கு நிர்வாக குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

முகேஷ் அம்பானி 1977 ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் நிர்வாக குழுவில் இருந்து வருகிறார், ஜூலை 2002 இல் அவரது தந்தை மற்றும் குழுமத் தலைவரான திருபாய் அம்பானியின் மரணத்திற்குப் பிறகு நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தார்.

இதன் பின்பு அனில் அம்பானி, முகேஷ் அம்பானி மத்தியிலான பிரச்சனைக்கு பின்பு பெட்ரோலியம் சொத்துக்களை முகேஷ் அம்பானி கைப்பற்றியதன் மூலம் தொடர்ந்து ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் நிர்வாக தலைவராகவே உள்ளர். இந்த நிலையில் கடைசி 5 வருட நீட்டப்புக்காக தற்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கைக்கு ஒப்புதல் கிடைப்பது 99 சதவீதம் உறுதி என்றாலும், 5 வருடத்திற்கு பின்பு யார் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைவராக இருப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. முகேஷ் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது பல துறையில் விரிவாக்கம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே டெலிகாம் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ ஆகாஷ் அம்பானிக்கு, ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு ஈஷா அம்பானிக்கு, ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பிரிவு அனந்த் அம்பானிக்கு என பிரிக்கப்பட்டு உள்ளது. இதை தாண்டி ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனியாக பிரிக்கப்பட்டு வெற்றிக்கண்ட நிலையில், அடுத்தடுத்து ஒவ்வொரு நிறுவனமாக பிரிய உள்ளது.

இப்படியிருக்கையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டாடா சன்ஸ் போல ஹோல்டிங் நிறுவனமாக மாறி தொடர்ந்து முகேஷ் அம்பானி தலைவராக இருக்க வாய்ப்புகள் உள்ளது. ரிலையன்ஸ் O2C பிரிவுக்கு கூடுதல் பொறுப்பாக ஆகாஷ் அம்பானிக்கு கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+