மும்பை: ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி RuPay networkல் இரண்டு கிரெடிட் கார்டுகளை (Reliance credit card) அறிமுகம் செய்ய உள்ளார்.
மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம் மற்றும் வாடகை போன்றவற்றை செலுத்தலாம் என்பதால் அதிகம் பேர் தற்போது கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். வங்கிகளும் இப்போது போட்டி போட்டு வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு கொடுத்து வருகின்றன. ரொக்க அட்டையை அதாங்க டெபிட் கார்டை காட்டிலும் இப்போது கிரெடிட் கார்டு வாயிலாக அதிகளவில் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டில் டெபிட் கார்டு வாயிலாக ரூ.1.33 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. அதேசமயம் டெபிட் கார்டு வாயிலாக ரூ.53 ஆயிரம் கோடி அளவுக்கே பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இந்த ஒரு புள்ளிவிவரத்தின் வாயிலாகவே நம் நாட்டில் கிரெடிட் கார்டு பயன்பாடு எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கிரெடிட் கார்டு சந்தையில் வளமான வர்த்தக வாய்ப்பு இருப்பதை அறிந்த ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது இந்த துறையில் களம் இறங்குகிறார். முகேஷ் அம்பானி RuPay networkல் இரண்டு கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல். இதற்காக நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் ரிலையன்ஸ் கைகோர்த்துள்ளது.
டெக்க்ரஞ்ச் அறிக்கையின்படி, ரிலையன்ஸ் நிறுவனம் எஸ்.பி.ஐ. உடன் இணைந்து இரண்டு புதிய ரிலையன்ஸ் கிரெடிட் கார்டுகள் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கிரெடிட் கார்டு இணை பிராண்டுடன் இருக்கும். அந்த கிரெடிட் கார்டுகள் ரிலையன்ஸ் எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் என அழைக்கப்படும். Reliance SBI Card வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பலன்களை வழங்கும். இதில், ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கான வவுச்சர்களும் அடங்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிதி நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் அண்மையில் கடன் மற்றும் காப்பீட்டு துறையில் அடியெடுத்து வைத்தது. மேலும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் டெபிட் கார்டுகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்தசூழ்நிலையில், கிரெடிட் சந்தையில் களம் இறங்குவது நிதித் துறையில் முகேஷ் அம்பானியின் இருப்பை வலுப்படுத்தும்.


Click it and Unblock the Notifications