ராதிகா மெர்ச்சன்ட்டை ஆனந்த் அம்பானி இந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார். முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் பிரம்மாண்டமான திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளை மூன்று நாள் ஆடம்பரமாக ஏற்பாடு செய்தனர். இது மார்ச் 3 அன்று நிறைவடைந்தது.
பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், கோடீஸ்வர தொழிலதிபர்கள் அம்பானி குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டனர். இதில் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஷ்லோகா மேத்தாவின் உபேர்-கூல் தோற்றம் விருந்தினர்களை கவர்ந்தது.

இந்த நிலையில் அம்பானியின் மூத்த மருமகளான ஷ்லோகா மேத்தா திருமணத்துக்கு முந்தைய விழாக்களின் 3வது நாளில் தனது பச்சை நிற மிடி ஆடையால் அனைவரையும் திகைக்க வைத்தார்.
ஷ்லோகா அப்போது பேகி பேன்ட் போட்டிருந்தது மிகவும் பொருத்தமாக இருந்தது.
ஷ்லோகா மேத்தாவின் ஆடை புகழ்பெற்ற டிசைனர் ஆஸ்கார் டி லா ரென்டாவால் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டது. ஆடையின் விலை 13,24,788 ரூபாய்.
இருப்பினும், ஷ்லோகா மேத்தாவின் ஆடை மட்டும் வைரலாகவில்லை. ஷ்லோகா மேத்தா தனது ஆடைக்குப் பொருத்தமாக ஒரு அற்புதமான பச்சை நிற தோல் பையை வைத்திருந்தார். இதன் விலை $70,000 அதாவது ரூ. 57,99,965.

93,60,00 ரூபாய் மதிப்புள்ள மரகதம் பொறிக்கப்பட்ட கிளி-மோடிஃப் கார்டியர் வாட்ச் மூலம் ஷ்லோகா மேத்தா தனது கம்பீரமான மற்றும் ஆடம்பரமான தோற்றத்தை ஜொலிப்பாக வைத்திருந்தார்.
ஷ்லோகா மேத்தா எப்போதும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் போது விலை உயர்ந்த ஆடைகள், நகைகளை அணிந்து வந்து பார்வையாளர்களைக் கவர்வார். அண்மையில் கரண் ஜோஹர் நடத்திய விருந்தில் 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடை அணிந்து கலந்து கொண்டார்.
பல வண்ண மலர்கள் அச்சிடப்பட்ட கவுன் உடையில் அவர் அழகாகத் தெரிந்தார். பார்ட்டியில் தனது மகன் பிருத்வியுடன் வந்திருந்த ஷ்லோகா, பாப்பராசி கேமராக்களுக்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்து சிரித்தார். இந்த விருந்தில் கரீனா கபூர் கான், கவுரி கான், ராணி முகர்ஜி, ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சியில் புகழ்பெற்ற வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ராவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தங்க நிற லெஹங்காவில் ஷ்லோகா மேத்தா தோன்றினார். ஸ்லோகாவின் அழகையும் நேர்த்தியையும் கச்சிதமாக பூர்த்தி செய்யும் கில்டட் கோல்ட் கலர் பேலட்டைக் கொண்ட இந்த உடையில் கண்கவர்ந்தார்.
அவரது கவர்ச்சியான தோற்றத்துக்கு மேட்ச்சாக ஸ்லோகா வைர ஆபரணங்களை அணிந்திருந்தார். அவரது காதுகள் முழுவதையும் மறைக்கும் பிரமிக்க வைக்கும் வைரக் காதணிகளையும், அதற்குப் பொருத்தமான வைர நெக்லஸையும் அணிந்திருந்தார். இவை இரண்டும் அவரது அலங்காரத்தை அழகாக பூர்த்திசெய்து, அவருடைய ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்தின.

பிரபல ஒப்பனை கலைஞரான புனித் பி சைனி, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அழகான படங்களில் ஷ்லோகாவின் திகைப்பூட்டும் தோற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார். இது "மினுமினுப்பு மற்றும் கவர்ச்சி" நிறைந்த இரவு என்று பொருத்தமாக அந்த படங்களுக்கு புனித் பி சைனி தலைப்பிட்டார்.
ஸ்டைலிஸ்ட் தியா மேத்தா ஜாதியா ஷ்லோகாவுக்கு மாலையில் மேக்கப் போட்டு விட்டிருந்தார். அவரது தலைமுடியை பிரியங்கா போர்கர் மற்றும் கேஷா பட்டேல் திறமையாக ஸ்டைல் செய்தார்கள். இருவரும் சேர்ந்து, மூச்சடைக்கக்கூடிய மற்றும் மறக்க முடியாத தோற்றத்தை உருவாக்கினர், நட்சத்திரங்கள் நிறைந்த நிகழ்வில் ஷ்லோகா அம்பானியின் அதிநவீன பாணியை வெளிப்படுத்தினர்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications