இந்திய ரீடைல் சந்தையில் பெரும் மாற்றத்தையும், புரட்சியும் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட ஜப்பான் நாட்டின் 7-Eleven கடைகள் பெரும் தோல்வியை அடைந்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 7-லெவன் ஒப்பந்தம் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி மற்றும் ரீடைல் துறையில் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தைக் கொண்டு இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் கையில் இருந்தும் வெற்றிபெறவில்லை என்பது தான் சோகமான விஷயம்.
உலகம் முழுவதும் இயங்கி வரும் பிரபலமான 7-Eleven கடைகள் இந்தியாவில் தொடர்ந்து பெரும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது, ரிலையன்ஸ் ரீடைல்-க்கு முன்பு பியூச்சர் ரீடைல் நிறுவனத்திடம் இருந்த போதும் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்த காணத்தால் 5 ஆண்டுக்கான மாபெரும் ஒப்பந்தத்தை 7-Eleven நிர்வாகம் அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் ரீடைல்-க்கு கொடுத்தது.

ஆனால் இந்த 5 வருட காலத்தில் 7-Eleven பிராண்ட் பிரபலமாக மாறினாலும் மக்களிடத்தில் போதுமான வரவேற்பு கிடைக்காத காரணத்தால் லாபமற்ற நிறுவனமாகவே இருந்து வருகிறது. இதனால் ரிலையன்ஸ் ரீடைல் - 7-Eleven மத்தியிலான தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.
தற்போது இந்தியாவில் இயங்கி வரும் 60 கடைகள் மூட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதற்காகப் பல 7-Eleven கடைகளில் இருக்கும் சரக்குகள் தீர்க்கப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் தற்போது குவிக் காமர்ஸ் சேவைகள் பெரியளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கும் காரணத்தால் அனைத்து சூப்பர் மார்கெட், டிப்பார்மென்டல் ஸ்டோர், மளிகைக் கடைகள் வரையில் அனைத்தும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்த அலையில் தற்போது அம்பானி கையில் இருக்கும் 7-Eleven பிராண்டுக்கும் அடி விழுந்துள்ளது.
கிஷோர் பியானி-யின் ரீடைல் வர்த்தக சாம்ராஜ்ஜியம் பெரும் தோல்வி அடைந்திருந்த வேளையில் 2021 ஆம் ரிலையன்ஸ் ரீடைல் ஜப்பான் நாட்டின் 7-Eleven உடன் இந்தியாவுக்கான மொத்த பிரான்சைசி வர்த்தகத்தைப் பெற்றது.
ஆனால் ஆரம்பம் முதல் ரிலையன்ஸ் ரீடைல் எதிர்கொண்ட முக்கியமான பிரச்சனை அதிகப்படியான இயக்க செலவுகள் தான், இதைக் குறைக்க முடியாத காரணத்தாவ் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.
மார்ச் 2026 உடன் முடிந்த நிதியாண்டில் 7-Eleven இந்தியாவில் சுமார் 92 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியது, ஆனால் 90 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications


