நாட்டின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் மகள் இஷா அம்பானி இன்று 33வது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சில்லறை வர்த்தகத்தை ஈஷா அம்பானி கையாள்கிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ரிலையன்ஸ் ஜியோ வணிகத்தை ஆகாஷ் அம்பானி கையாள்கிறார். இருவரின் நிகர மதிப்பு அவர்கள் தற்போது வைத்துள்ள கார்கள் என்னனென்ன என்பதை பார்க்கலாம்.
நாட்டின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் மகள் இஷா அம்பானி இன்று 33வது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். ஆகாஷ் மற்றும் இஷா அம்பானி இருவரும் இரட்டை சகோதரர்கள். இருவரும் 23 அக்டோபர் 1991 இல் பிறந்தவர்கள். இன்று ஆகாஷ் மற்றும் இஷா அம்பானி இருவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் .

இஷா அம்பானியின் நிகர மதிப்பு:முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 33 வயதான இஷா அம்பானி, ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) மேற்பார்வையிடும் பொறுப்பில் உள்ளார். இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் வணிகத்தை வெகுதூரம் கொண்டு சென்றுள்ளார். இஷா அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 800 கோடி ரூபாயாக உள்ளது. ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் இஷா அம்பானி 31வது இடத்தில் உள்ளார். 2018 ஆம் ஆண்டில், இஷா அம்பானி ஆனந்த் பிரமாலை மணந்தார்.
ஆகாஷ் அம்பானியின் நிகர மதிப்பு:முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் வர்த்தகத்தை கவனித்து வருகிறார். ஜூன் 27, 2022 அன்று, ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு அவர் நிறுவனத்தை நிறைய முன்னேற்றினார். இவரது சொத்து மதிப்பு சுமார் 3300 கோடி ரூபாய். ஹுருன் இந்தியா 35 வயதுக்குட்பட்டோர் பட்டியலில் ஆகாஷ் அம்பானி 32வது இடத்தில் உள்ளார். ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவில் தனது பணியின் மூலம் 5G மற்றும் AI தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறார்.
ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி கார்கள்: ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி இருவரும் விலையுயர்ந்த கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ்
BMW 7-சீரிஸ், போர்ஸ் கேமன் எஸ், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மற்றும் பென்ட்லி அர்னேஜ் ஆர் ஆகிய கார்கள் உள்ளனர்.
முகேஷ் அம்பானி குடும்பம்:ரிலையன் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு நீத்தா அம்பானி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் இளைய மகன் ஆனந்த் அம்பானி ஆகிய வாரிசுகள் உள்ளனர். ஆகாஷ் அம்பானிக்கு ஷ்லோகா தம்பதியினருக்கு பிரித்வி அம்பானி மற்றும் வேதா அம்பானி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதேபோல் இஷா அம்பானி ஆனந்த் பிரமல் தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. சமீபத்தில் இவர்களது தம்பி ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் மகள் ராதிகா மெர்சண்ட்டிற்கும் திருமணம் உலக அளவில் பிரமாண்ட திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications