முகுல் மகாவீர் அகர்வாலுக்கு இண்டோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.5.34 கோடிக்கும் அதிகமாக லாபம் கிடைத்தது.
இந்திய பங்குச் சந்தைகளுக்கு நேற்று ஒரு அற்புதமான நாளாக அமைந்தது. தொடர்ந்து 6 வர்த்தக தினங்களாக சரிவை மட்டுமே சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள் நேற்று உயர்வை சந்தித்தன. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 635 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் லாபம் கிடைத்தது. அதேசமயம் ஒரு பிரபலமான பங்குச் சந்தை முதலீட்டாளர் நேற்று ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மேல் ஆதாயம் பார்த்தார்.

முகுல் மகாவீர் அகர்வால் ஒரு ஸ்மால் கேப் முதலீட்டாளர். இவர் ஜவுளி மற்றும் பெட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இண்டோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 1.17 சதவீத பங்குகளை வைத்தார். அதாவது இண்டோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 23.25 லட்சம் பங்குகளை வைத்துள்ளார். தேசிய பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே இண்டோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை 52 வார கால புதிய உச்சத்தை தொட்டது. வர்ததகத்தின் முடிவில் இண்டோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கின் விலை ரூ.23.05 உயர்ந்து ரூ.263.80ஆக இருந்தது.
ஆக, ஒரு பங்குக்கு ரூ.23 உயர்ந்துள்ளது என்றால், 23.25 லட்சம் பங்குகளை வைத்துள்ள முகுல் மகாவீர் அகர்வாலுக்கு எவ்வளவு ஆதாயம் கிடைத்திருக்கும்?. முகுல் மகாவீர் அகர்வாலுக்கு இண்டோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.5.34 கோடிக்கும் அதிகமாக லாபம் கிடைத்தது. பெரிய கனவு காணத் துணிபவர்களுக்கு பங்குச் சந்தை ஒரு விளையாட்டு மைதானமாக இருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
இண்டோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு உண்மையான மல்டிபேக்கராக வளர்ந்துள்ளது என்பது தெளிவாகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இண்டோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு 100 சதவீதத்துக்கும் அதிகமான லாபத்தை வழங்கியுள்ளது. இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் நல்ல ஆதாயம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications