மும்பையை சேர்ந்தவர் பாரத் ஹரக்கந்த் ஷா (வயது 72) என்ற முதியவர். இவர், பரம்பரையாக பெற்ற பங்குகளை நிர்வகிக்க கொடுத்த ஒரு பங்கு தரகு நிறுவனத்தால் (Brokerage Firm) சுமார் ரூ.35 கோடி வரை இழப்புகளை சந்தித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தனக்கு லாபம் வந்து கொண்டிருப்பதாக நம்பியிருந்த முதியவர் ஷாவுக்கு, கடந்த 2024 ஜூலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அப்போது தான், தான் ஒரு பெரிய நிதி மோசடியில் சிக்கியிருப்பதை அவர் உணர்ந்துள்ளார். இதையடுத்து, அந்த முதியவர் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் மோசடி புகார் அளித்துள்ளார். இதையடுத்து, குளோப் கேப்பிட்டல் (Globe Capital) என்ற நிறுவனத்திற்கு எதிராக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.

புற்றுநோயாளிகளுக்காக பரேலில் குறைந்த வாடகையில் விருந்தினர் விடுதியை நடத்தி வரும் முதியவர் ஷா, பங்குச் சந்தையை பற்றித் தனக்கோ தன் மனைவிக்கோ எந்த அறிவும், அனுபவமும் இல்லை என்று கூறியுள்ளார். ஷாவின் தந்தை கடந்த 1984ஆம் ஆண்டு இறந்த பிறகு, அந்தக் குடும்பத்திற்கு சொந்தமான பங்குகள், பல தசாப்தங்களாக எந்த வர்த்தகமும் செய்யப்படாமல் அப்படியே இருந்துள்ளன.
2020 ஆம் ஆண்டில், ஒரு நண்பரின் யோசனைப்படி, தனது பாரம்பரிய பங்குகளை பாதுகாப்பாக சந்தையில் பயன்படுத்த நினைத்து, டிமேட் மற்றும் வர்த்தக கணக்குகளைத் திறக்க முடிவு செய்தார். அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள், கூடுதல் முதலீடு தேவையில்லை. இந்தப் பங்குகளைப் பிணையாக வைத்துக் கொண்டு பாதுகாப்பாக வர்த்தகம் செய்யலாம் என்று உறுதி அளித்து, ஷாவின் பங்குகளை தங்கள் நிறுவனத்திற்கு கைமாற்றி கொண்டனர்.
நம்பிக்கை மோசடி : அந்த நிறுவனம், முதியவர் ஷாவுக்காக நியமித்த தனிப்பட்ட வழிகாட்டிகள் இரண்டு பேர், படிப்படியாக ஷாவின் வர்த்தக கணக்கின் மீதும், தகவல் தொடர்புகள் மீதும் முழுமையான கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில், ஷாவுக்குத் தேவையான தகவல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன.
அவர், வந்த அனைத்து ஓடிபி (OTP) எண்களையும் உள்ளிட்டு, எந்த கேள்வியும் கேட்காமல் அவர்கள் சொன்ன அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றி வந்துள்ளார். ஷாவுக்கு வந்த வருடாந்திர அறிக்கைகள் அனைத்தும், தொடர்ந்து லாபம் வந்து கொண்டிருப்பதாகவே ஒரு தவறான சித்திரத்தை காட்டியுள்ளன.
4 ஆண்டுகள் வரை நிறுவனம் எங்களுக்கு ஒரு பொய் படத்தை காட்டியது. ஆனால், உண்மையான நஷ்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது என்று ஷா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஜூலை 2024-ல், நிறுவனத்தின் ரிஸ்க் மேலாண்மை துறையில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, அனைத்து உண்மையையும் வெளிப்படுத்தியது.
உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமாக சேர்த்து, கணக்குகளில் உடனடியாக செலுத்த வேண்டிய ரூ.35 கோடி கடன் இருப்பு உள்ளது. நீங்கள் உடனடியாக அதை செலுத்த வேண்டும், இல்லையெனில் உங்கள் பங்குகள் விற்கப்படும்" என்று அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஷா அந்த நிறுவனத்திற்கு சென்று விசாரித்தபோது, அவரது அனுமதி இல்லாமல் அவரது கணக்குகளில் பெரிய அளவில் வர்த்தகம் நடந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக, ஒரே எதிர்த்தரப்புடன் திரும்பத் திரும்பப் பங்குகளை வாங்குதல், விற்றல் போன்ற சுழற்சி வர்த்தகங்கள் மூலம் அவரது கணக்கு மிகப்பெரிய நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளது தெரியவந்தது.
இழப்பை மேலும் தவிர்க்க, ஷா வேறு வழியின்றி தனது மீதமுள்ள பங்குகளை விற்று, கேட்கப்பட்ட ரூ.35 கோடியை நிறுவனத்துக்கு செலுத்தியுள்ளார். பின்னர், ஷா அந்நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து முழுமையான வர்த்தக அறிக்கையைப் பதிவிறக்கம் செய்து, தனக்கு முன்பு மின்னஞ்சல் செய்யப்பட்ட அறிக்கைகளுடன் ஒப்பிட்டபோது, இரண்டும் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை என்பதை அறிந்து, ஏமாற்றின் உண்மையான அளவை உணர்ந்தார்.
மேலும், தேசியப் பங்குச் சந்தையில் இருந்து நிறுவனத்துக்கு வந்த பல எச்சரிக்கை நோட்டீஸ்களுக்கு, தனக்குத் தெரியாமலேயே தன் பெயரில் பதில்கள் அனுப்பப்பட்டுள்ளதையும் அவர் அறிந்தார். இந்தச் சம்பவம் திட்டமிட்ட நிதி மோசடி என்று குற்றம் சாட்டப்பட்டு, வன்ராய் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளான 409 (நம்பிக்கைத் துரோகம்) மற்றும் 420 (மோசடி) ஆகியவற்றின் கீழ் பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தனது அமைதியான ஓய்வூதியத் திட்டத்தை நம்பியிருந்த ஷாவுக்கு, இந்த சம்பவம் ரூ.35 கோடி என்ற ஒரு தனிச் சுமையாக மாறியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications