ஆன்லைன் விளம்பரத்தை கிளிக் செய்த நபர்.. அநியாயமாய் போன 1.16 கோடி.. ஸ்கெட்ச் போட்டு மோசடி!

மும்பை: அண்மைக்காலமாக பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதாக கூறி மக்களிடமிருந்து லட்சக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டு வருகிறது. அப்படித்தான் மும்பையை சேர்ந்த ஒருவர் ஆன்லைனை சேர்ந்த மோசடி கும்பலிடம் சிக்கி 1.16 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதற்கு காரணமாக இருந்தது ஒரு ஆன்லைன் விளம்பரம் தான். மும்பையில் ஒரு ஐடி நிறுவனத்தில் அதிகாரி நிலை வேலையில் இருக்கும் 49 வயது நபர் ஆன்லைனில் ஒரு விளம்பரத்தை பார்த்திருக்கிறார்.

அதில் பங்குச்சந்தை முதலீட்டில் சிறந்த லாபம் பெற்று தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதனை கிளிக் செய்த உடனே அவருடைய தொலைபேசி எண்ணை கேட்டுள்ளனர். இதனை அடுத்து அவர் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார் . அந்த குழுவில் ஏராளமானவர்கள் அவரைப் போலவே இணைந்துள்ளனர்.

 ஆன்லைன் விளம்பரத்தை கிளிக் செய்த நபர்.. அநியாயமாய் போன 1.16 கோடி.. ஸ்கெட்ச் போட்டு மோசடி!


இந்த குழுவில் ஒவ்வொரு நாளும் நிபுணர் என அழைக்கப்படும் ஒருவர் இன்றைய பங்குச்சந்தை எப்படி இருந்தது, எந்தெந்த பங்குகள் ஏறின, இறங்கின என்பது குறித்து சந்தை நிலவரங்களை தினம் தோறும் பதிவிட்டுள்ளார். அது மட்டும் இன்றி இந்த நிறுவன பங்குகளை வாங்கலாம், இந்த நிறுவன பங்குகளை இப்போது விற்கலாம் என்பன போன்ற பரிந்துரைகளை வழங்கியுள்ளார். அந்த குழுவில் இருந்த ஏராளமானவர்கள் அவருடைய பரிந்துரையை பின்பற்றி வர்த்தகம் செய்து லட்சக்கணக்கில் லாபம் ஈட்டியதாக பதில் அளித்துள்ளனர்.

இதனை எல்லாம் பார்த்து நம்பிய மும்பையை சேர்ந்த அந்த நபர் அந்தக் குழுவினருடன் தொடர்பு கொண்டு அவர்கள் அனுப்பிய செயலியில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளார். மேலும் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு சிறிது சிறிதாக பணத்தை அனுப்பி வர்த்தகம் செய்து இருக்கிறார். இவ்வாறு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அவர் 1.16 கோடி ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். இதனை அடுத்து அந்த தளத்தில் அவர்கள் கூறியபடி முதலீடு செய்து பெருமளவிலான லாபத்தை கண்டுள்ளார்.

அந்த பணத்தை திரும்ப எடுக்க முயற்சிக்கும் போது குறிப்பிட்ட அந்த செயலியில் இருந்து பணத்தை திரும்ப பெற முடியவில்லை என அவருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து அந்த குழுவினரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் பணத்தை திரும்ப வழங்காமல் கூடுதலாக பணம் செலுத்துமாறு கூறியுள்ளனர். அப்பொழுதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைக்காலமாகவே இந்தியாவில் இதுபோன்ற பங்குச்சந்தை முதலீடு சார்ந்த மோசடி கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. எனவே மக்கள் சமூக வலைதளங்களிலோ அல்லது இணையதளங்களிலோ இது போன்ற விளம்பரங்களை பார்க்கும்போது அவற்றை அது இருப்பவர்களை தொடர்பு கொள்வது, அவர்கள் கூறுவது போல வங்கி பணத்தை பரிமாற்றம் செய்வது என்பன உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என காவல்துறையினர் மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளனர்.

ரிஸ்கே இல்லாமல் லாபம், குறைந்த முதலீட்டில் அதிக லாபம், பங்குச்சந்தை முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆகலாம் என்பன உள்ளிட்ட விளம்பரங்கள் உங்களின் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை விழுங்க காத்திருக்கும் எமன் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+