மும்பை: தனது மனிதாபிமான செயல்களுக்காக அறியப்பட்ட தொழிலதிபர் மற்றும் தொண்டு நிறுவனர் ரத்தன் டாடா, மும்பையில் உள்ள ஒரு நாய் குட்டியின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், ரத்தன் டாடா, உயிருக்கு ஆபத்தான நிலையில், இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நாய் குட்டிக்கு இரத்த தானம் செய்யும் நாய் குட்டியைக் கண்டுபிடிக்க உதவுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
எங்கள் கால்நடை மருத்துவமனையில் உள்ள இந்த 7 மாத நாய் குட்டிக்கு அவசரமாக ரத்தம் ஏற்ற வேண்டும். "டிக் காய்ச்சல்" மற்றும் உயிருக்கு ஆபத்தான இரத்த சோகைக்காக இந்த நாய் குட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு அவசரமாக மும்பையில் ரத்த தானம் செய்யும் நாய் குட்டி தேவை என்று உருக்கமான பதிவைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ரத்த தானம் வழங்க தகுதியான நாய் குட்டிகளுக்கான அடிப்படை தேவைகளையும் அவர் பதிவிட்டுள்ளார். ரத்த தானம் வழங்கும் நாய் குட்டி 1 முதல் 8 வயது வயதுடையதாகவும், 25 கிலோவுக்கு மேல் எடையுடனும் இருக்க வேண்டும். மேலும் அந்த நாய் குட்டிக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, பூச்சி மருந்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த கடுமையான நோய்களாலும் அவை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
டிக் மற்றும் பிளேஸ் போன்ற நோய்கள் இல்லாததாகவும் இருக்க வேண்டும். மேலும் கடந்த 6 மாதங்களில் டிக் காய்ச்சல் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று ரத்த தான வழங்கும் நாய் குட்டிகளுக்கான தேவைகளையும் அவர் பதிவியிட்டுள்ளார். மும்பையில் உள்ள ரத்தன் டாடா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த நாய் குட்டிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் +91 70218 50400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் ரத்தன் டாட்டா பதிவிட்ட இந்த போஸ்ட் 3600-க்கும் மேற்பட்ட கமெண்ட்களை அள்ளி குவித்துள்ளது. பல இன்ஸ்டாகிராம் பயனர்கள், அந்த நாய் குட்டிக்கு உதவ முன்வந்துள்ளனர். இந்த அக்கறை மிகுந்த செயல் பலரின் பாராட்டையும் அவருக்கு பெற்று தந்துள்ளது.
"ஒரு கோடீஸ்வரர் இது போன்ற நாய் குட்டிக்கு உதவுவதற்கான கோரிக்கை பதிவை பதிவிட்டுள்ளதை கற்பனை செய்து பாருங்கள்" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். "எந்த லாபத்திற்காகவும் பதிவிடாத இவர், நாய் குட்டிக்காக இரத்த தானம் தேவை என பதிவிட்டிருக்கிறார். இது அவரின் பணிவிற்கான சிறந்த பாடம்" என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.
நாய் குட்டி குணமடைய வேண்டும். இந்த நாய் குட்டிக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டும். இந்த நாய் குட்டியை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். பெரிய மனது கொண்ட மனிதர். ரத்தன் டாடா. நீங்கள் மிகச் சிறந்தவர். உங்களை போன்ற மனிதர்கள் உலகத்திற்கு தேவை. உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும், அவரது குடும்பமும் நிறுவனமும் தங்கள் வருமானத்தில் அதிகமாக சமுதாய நல திட்டங்களுக்கு நன்கொடை அளிக்கின்றனர் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
நாய்கள் மீதான ரத்தன் டாடாவின் அன்பு யாருக்கும் புதிதல்ல. முன்னதாக, மும்பையில் உள்ள தாஜ்மஹால் ஹோட்டலில் தெரு நாய்களுக்கு அனுமதி வழங்கியதற்க்காக சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்றார். ரூபி கான் என்ற சமூக வலைதள பயனர் தனது பதிவில், தாஜ்மஹால் ஹோட்டலின் நுழைவாயிலில் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த ஒரு நாயைக் கண்டதாகவும், ஹோட்டல் ஊழியர்களிடம் நாய்கள் வளாகத்திற்குள் நுழைந்தால் அவற்றை நன்றாக நடத்துமாறு ரத்தன் டாடா கண்டிப்பாக உத்தரவிட்டதாகவும் பகிர்ந்து கொண்டார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications