மும்பை: சமீப காலமாக மோசடிக்காரர்களின் அட்டூழியங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு சான்றாக மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மும்பையில் வசிக்கும் காஷ்மிரா கான் என்ற 63 வயது பெண்ணிடம் மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த மோசடிக்காரர்கள் போலி ஐபிஎஸ் அதிகாரிகள் போல காட்டிக் கொண்டு ரூ. 5 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
மும்பையின் பிரீச் கேண்டி பகுதியைச் சேர்ந்த காஷ்மீராகான் என்ற பெண் அளித்த புகாரில், தன்னை மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபிலிருந்து போலி ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு, தான் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பண மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளதாகக் கூறி மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மே 13ஆம் தேதி அன்று தெரியாத நம்பரிலிருந்து காஷ்மீராகானுக்கு அழைப்பு வந்துள்ளது. தனது பெயரில் ஈரானில் இருந்து ஒரு கொரியர் வந்திருப்பதாகக் கூறிய மோசடிக்காரர்கள், அதில் கிரெடிட் கார்டுகள், பொம்மைகள் மற்றும் 5 பாஸ்போர்ட்டுகள் உள்ளன. மேலும் மென்மையான அந்த பொம்மைகளுக்குள் 450 கிராம் MDMA போதைப் பொருட்கள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளனர். எந்தவித பொருட்களையும் தனக்கு யாரும் அனுப்பவில்லை என்று காஷ்மீராகான் கூறியபோது, அந்த நபர், பார்சல் அவருடைய பெயரில் உள்ளது என்றும், ஆதார் அட்டை விவரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர், இந்த விவகாரத்தை காவல்துறை கையாளும் என்றும் கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, காஷ்மீராகானுக்கு ஸ்கைப் வழியாக ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த பெண் தன்னை அந்தேரி கிழக்கு, சஹார் காவல் நிலைய சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்னீத் கொண்டால் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார். இதனை உண்மை என்று காஷ்மிரா கானுக்கு நம்ப வைக்கும் விதமாக தன்னுடைய ஐடி கார்டையும் அந்த பெண் காண்பித்துள்ளார். அதன்பின் டிசிபி மிலிந்த் பரம்பேவிடம் அழைப்பை ஒப்படைப்பதாக அந்தப் பெண் காஷ்மீராகானிடம் கூறியுள்ளார்.
அதன்பின் தன்னை டிசிபி போல காட்டிக் கொண்ட நபர் பரிவர்த்தனைகளைச் சரி பார்க்கும் வகையில், காஷ்மிரா கானின் வங்கி கணக்கு விவரங்களைக் கேட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். ஸ்கைப்பில் விசாரணை முடிந்ததும் தனக்கு அனுமதி சான்றிதழ்களை வழங்குவதாக மோசடிக்காரர்கள் ஏமாற்றியதாகவும் காஷ்மிரா கான் கூறியுள்ளார்.
பிறகு டிசிபி என்று கூறிக்கொண்டு பேசிய நபர், இந்திய ரிசர்வ் வங்கியுடன் வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என்று கூறி ரூ. 5 லட்சத்தை வேறொரு வங்கி கணக்குக்கு அனுப்ப சொல்லி இருக்கிறார். உடனே காஷ்மிரா கானும் பயந்து அவர்கள் சொன்னதை செய்துள்ளார்.
ஏதோ தவறு நடப்பதை உணர்ந்த காஷ்மிரா கான், சஹார் காவல் நிலையத்திற்கு விரைந்துள்ளார். அவருடைய புகாரின் பேரில், மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மோசடி செய்தவர்களின் வங்கிக் கணக்கு கர்நாடகாவின் பிதாரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும், சம்பவம் குறித்து வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும், சிறிய அளவிலான பணத்தை மீட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரம்பே, டிசிபி பிரதீப் சாவந்த் மற்றும் அம்னீத் கொண்டல் ஆகியோரின் போலி ஐடிகளைப் பயன்படுத்தி மோசடி செய்ததில், குற்றவாளிகளின் பெயரில் பல வழக்குகள் சமீபத்தில் பதிவாகியுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.
மிலிந்த் பரம்பே மும்பையின் தற்போதைய காவல்துறை ஆணையராக உள்ளார் மற்றும் மோசடி செய்பவர் கூறியது போல் டிசிபி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், அம்னீத் கொண்டல் பஞ்சாபில் உள்ள கன்னாவின் தற்போதைய மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக உள்ளார்.
இதுபோன்ற மோசடிகளைத் தடுப்பதற்காக, வங்கி விவரங்கள், OTP போன்ற ரகசிய தகவல்களை அறியாத நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என காவல்துறை மக்களை எச்சரிக்கிறது.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications