மும்பை: எண்ணற்ற மோசடி சம்பவங்களைத் தொடர்ந்து பார்த்த வண்ணம் வருகிறோம். இன்றும் அதே போல ஒரு மோசடி சம்பவம் மும்பையை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு நடந்துள்ளது. இதனால் இவர்கள் மொத்தம் ரூ. 53 லட்சம் தொகையை இழந்துள்ளனர்.
வேலைவாய்ப்பு தொடர்பான மெசேஜ்கள் தற்போது வாட்சப்பில் அதிகம் பகிரப்படுகிறது. தினமும் ஒரு மணி நேரம் நீங்கள் வேலை செய்தால் ஒரு நாளைக்கு ரூ. 150 ரூபாய் முதல் ரூ. 5000 வரை பெறலாம் என்பது போன்ற மெசேஜ்களை அனுப்பி மோசடி செய்கின்றனர். இதுபோன்ற மெசேஜ் உங்களுக்கு வாட்சப் அல்லது டெலிகிராமில் வந்தால் அவற்றை நிராகரித்து விடுங்கள். 2023ஆம் ஆண்டில் இருந்து இந்த புது டிரிக்கைப் பயன்படுத்தி மோசடி செய்து வருகின்றனர்.

இதுபோன்ற ஆன்லைன் மோசடிக்கு இறையாகி மும்பையை சேர்ந்த ஒரு இல்லத்தரசி மற்றும் ஒரு தொழிலதிபர் சுமார் ரூ. 28.51 லட்சம் மற்றும் ரூ. 24.36 லட்சத்தை இழந்துள்ளனர். மும்பையை சேர்ந்த இல்லத்தரசியிடம் சில வீடியோக்களுக்கு சப்ஸ்கிரைப் செய்தால் கண்டிப்பாக நிரந்தர வருமானம் கிடைக்கும் என்று கூறி ஏமாற்றியுள்ளனர்.
அதேபோல 44 வயதான தொழிலதிபரிடம் வீடியோக்கள் மற்றும் உணவகங்களுக்கு ரிவியூக்களை வழங்கினால் வருமானம் தருவதாக கூறி ரூபாய் ரூ 24.36 லட்சத்தை அபகரித்துள்ளனர். இவர் தொழிலதிபர் என்பதை தெரிந்து கொண்டு மோசடிக்காரர்கள் முதலில் ரூ. 56,000 ரூபாயை அந்தப் பெண் தொழில் அதிபர் அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளனர். அதன் பிறகு இது உண்மை என்று நம்பி அவரும் ரூ. 24.36 லட்சத்தை மோசடிக்காரர்களின் அக்கவுண்டுக்கு அனுப்பியுள்ளார்.
இரண்டு சம்பவமும் எப்படி நடந்தது, மோசடிக்காரர்கள் எதை வைத்து முதலீடு செய்ய தூண்டினார்கள் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது, மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் ஒரு முக்கியமான ஐடியா வேலை வாய்ப்புகளை வழங்குவது போல காட்டிக் கொள்வதுதான். அங்கிருந்து தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. அதன் பிறகு படிப்படியாக நம்ப வைத்து ஒருவரை முதலீடு செய்யும் அளவிற்கு தூண்டுகின்றனர். அதில் சில கும்பல் பயன்படுத்தும் யுத்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றை தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருங்கள்.
மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்திகள்:
1. கீழ்காணும் மெசேஜ் உங்களுக்கு வந்தால் அவை போலியானதாக இருக்கலாம்.
"Hello, I’ve a job opportunity for you. I would like to offer you a part-time job. This is a simple job and you are not required to pay any joining fee. And you can earn Rs 150-5,000 in a day in your account."
இதுபோன்ற மெசேஜ் வாட்சப், டெலிகிராம், எஸ்எம்எஸ், மெயில் என எதில் வேண்டுமானாலும் உங்களுக்கு அனுப்பப்படலாம். இதனை பார்க்கும் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். சிலர் இதே மெசேஜ்களை தமிழிலும் அனுப்புகின்றனர். ஒரு நாளைக்கு வேலை செய்தால் ரூ. 300 முதல் ரூ. 5000 வரை பெற முடியும் என்ற மெசேஜ் வந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
2. டாஸ்க் தருவதாக கூறி சிலர் ஏமாற்றி வருகின்றனர். அதாவது அவர்கள் அனுப்பும் PDF-ஐ பார்த்து அப்படியே டைப் செய்து தர வேண்டும் அல்லது youtube சேனல்களுக்கு லைக் போட வேண்டும் என்று பல ஐடியாக்களை வைத்து மக்களை ஏமாற்றுகின்றனர். இதிலும் சிலர் இது போன்ற வேலைகளை செய்வதற்கு முதலில் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியும் ஏமாற்றுகின்றனர். எந்த ஒரு வேலை வழங்கும் நிறுவனங்களும் உங்களிடம் இருந்து பணம் கேட்காது.
3. அதேபோல அங்கீகரிக்கப்படாத செயலிகளை, உங்களுடைய மொபைலில் பதிவிறக்க சொல்லலாம். மேலும் அதில் பங்குச்சந்தை முதலீடு குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் உங்களை சிறு தொகையை முதலீடு செய்ய வைத்து பெரிய தொகையை ஈட்டியது போல் ஸ்கிரீனில் காண்பித்து நம்ப வைக்கலாம். அவை அனைத்தும் போலியானவையே என்று தெரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற டிரிக்கை வைத்து தான் அவர்கள் உங்களை மேலும் முதலீடு செய்ய தூண்டுகின்றனர்.
More From GoodReturns

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications