எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி.. பங்கா பதவியா.. முருகப்பா குழுமத்தை விடாமல் விரட்டும் வள்ளி!

முருகப்பா குழுமத்தில் தனக்கு பதவி வேண்டும் என்று, அந்த குழுமத்தின் மறைந்த தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் வள்ளி அருணாச்சலம் தொடர்ந்து நிர்வாகிகளிடம் கேட்டு வருகிறார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு பதவிகள் மறுக்கப்பட்டதாகவும், இதனால் கோபம் கொண்ட வள்ளி அருணாச்சலம், தனக்கு கண்டிப்பாக பதவி வேண்டும். இல்லையெனில் எனது பங்கினை வாங்கிக் கொள்ளுங்கள் என நெருக்கடி கொடுத்தும் வந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த வள்ளி அருணாச்சலத்தின் பெண்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் குடும்ப தொழில்களில் பாலினம் குறித்த உணர்வுகள் இருந்த நிலையில், இது தற்போது ஒரு பொது விவகாரமாக உருவெடுத்துள்ளது என்றே கூறலாம்.

முருகப்பா குழும வாரிசு

முருகப்பா குழும வாரிசு

சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு சுமார் 28 தொழில்களை நிர்வகித்து வரும் முருகப்பா குழுமத்தில், சுமார் 50,000 பேருக்கு மேல் பணி புரிந்து வருகிறார்கள். இதன் மதிப்பு பல ஆயிரம் கோடி என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட முருகப்பா குழுமத்தை சேர்ந்த முன்னாள் நிர்வாக தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் தான் வள்ளி அருணாச்சலம்.

பதவி மறுப்பு

பதவி மறுப்பு

முருகப்பா குழுமம் பங்கு வைத்திருக்கும் நிறுவனமான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் தான், வள்ளி அருணாச்சலத்திற்கு பதவி மறுக்கப்பட்டதாகவும், இவர்களுக்கு அந்த நிறுவனத்தில் 8.15% பங்குகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. பதவி மறுக்கப்பட்ட நிலையில் எனது பங்கினை முழுக்க வாங்கிக் கொள்ளுங்கள், இல்லையெனில் பதவியை கொடுங்கள் என்றும் நிபந்தனை விதித்தார்.

சட்டப்படி நடவடிக்கை

சட்டப்படி நடவடிக்கை

மேலும் முருகப்பா குழுமத்தினர் தனது பங்கினை வாங்காவிட்டால், தான் நீதிமன்றத்தை நாடாபோவதாகவும் எச்சரித்திருந்தார். இது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. எனினும் இவரது கோரிக்கைக்கு குடும்பத்தினரின் பதிலை கேட்ட பின்னரே நடவடிக்கை எடுக்க உள்ளதாக வள்ளி அருணாச்சலம் அப்போது கூறியிருந்தார்.

மாற்றம் கொண்டு வரும்

மாற்றம் கொண்டு வரும்

தற்போது எனது போராட்டங்களும் எனது கதையும் பொது விவாதத்தையும் தொடங்கவும், எங்கள் நிறுவன கலாச்சாரத்திலிருந்து பாலின சார்பு நீங்கும் வரை அதைத் தொடரவும் உதவும் என்றும் நான் நம்புகிறேன். மேலும் பெண்களின் வாழ்க்கையில் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவும் என்றும் வள்ளி அருணாச்சலம் கூறியுள்ளார்.

தந்தைக்கு பதில் மகள் இல்லை

தந்தைக்கு பதில் மகள் இல்லை

சுமார் 36,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முருகப்பா குழுமத்தின் வாரிசுகளில் ஒருவரான வள்ளி அருணாச்சலம், குழு ஊக்குவிப்பாளார்கள் பெண்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு எதிரானவர்கள் என்று நினைக்கிறர்கள். ஏனெனில் தனது தந்தை இறந்த பிறகு தனக்கு பதவி மறுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார் வள்ளி அருணாச்சலம்.

இது எழுதப்படாத விதி

இது எழுதப்படாத விதி

குடும்ப வியாபாரத்தில் பெண்கள் பயிற்றுவிக்க அனுக்கக் கூடாது என்ற எழுதப்படாத விதியை எனது குடும்பம் எப்போதும் கொண்டுள்ளது. ஆனால் நாங்கள் நன்கு படித்தவர்கள் தான். எங்களுக்கு தொழிலில் பல வருட அனுபவம் உள்ளது. எங்களது திறமைகளை நாங்கள் செயல்படுத்தவோ அல்லது குடும்ப வணிகத்திற்கு பொருந்தாது என்று கூறவோ எந்த காரணமும் இல்லை. வியாபாரத்தில் நாங்கள் நன்கு பயிற்றுவிக்கப்படவில்லை என்பதை அவர்கள் செய்கிறார்கள்.

அனுபவம் இல்லாதவர்கள் வழி நடத்துகிறார்கள்

அனுபவம் இல்லாதவர்கள் வழி நடத்துகிறார்கள்

ஆனால் இந்த குடும்ப வணிகத்தில் எந்த வித முன் அனுபவமும் இல்லாத 23 வயதான ஒருவர் பதவிக்கும் வராலாம். ஆனால் எங்களின் அனுபவம் 23 வருடம். ஆனால் எங்களுக்கு பதவி மறுக்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு பதவி கொடுக்க என்ன அனுபவம் இருந்திருக்க முடியும் என்றும் வள்ளி அருணாச்சலம் கொதித்து எழுந்துள்ளார்.

பாலின பாகுபாடு

பாலின பாகுபாடு

பாகுபாடு காட்டப்படுகிறது. எனக்கும் என் சகோதரிக்கும் பாகுபாடு காட்டப்படுகிறது. இந்த குழுவில் ஆண் வாரிசுகள் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாகவும், தொடர்ந்து ஐந்து தலைமுறைகளாகவே ஆண் வாரிசுகளை மட்டுமே இந்த குழுமம் காண்பித்துள்ளது என்றும் கூறியுள்ளார். உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. தற்போது குடும்பத் தொழிலில் பெண்களும் தழுவி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறந்த உதாரணம்

சிறந்த உதாரணம்

சென்னையைச் சேர்ந்த அப்பல்லோ குழுமம், டிவிஎஸ் மற்றும் ரெட்டு சகோதரிகள் என அனைவரும் வணிக்கத்தை வளர்ப்பதிலும், விரிவாக்கம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க வேலையை செய்துள்ளனர். அதே பல முன்னணி குழுமங்களிலும் பெண்கள் தலைமை பொறுப்பு வகித்து வருகின்றனர் என்றும் சுட்டி காட்டியுள்ளார்.

இணக்கமான தீர்வு

இணக்கமான தீர்வு

ஆக இந்த விஷயத்தை இணக்கமாக தீர்ப்போம். என்றும் அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் வாரியம் ஊடகங்களில் தெரிவித்தாகதவும் வள்ளி கூறியுள்ளார். நான் கடந்த ஜனவரி 6ம் தேதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை. மாறாக என்ன செய்கிறார்கள் என்று தான் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், விரைவாக பதில் அளிக்குமாறும் கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+