மாணவர்களுக்கு சூப்பர் செய்தி.. 90 நாள் வட்டியில்லாமல் ஸ்மார்ட்போன் வாங்க கடன்.. முத்தூட் பின்கார்ப்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் பரவலுக்கு மத்தியில் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து, ஆன்லைன் பாடங்களை கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

ஆனால் இந்த பரவலுக்கும் மத்தியில் பல மாணவர்கள் ஆசிரியர்கள் ஆன்லைனில் நடத்தும் பாடங்களை, பல சவால்களுக்கும் மத்தியில் பெற இயலாமல் தவித்து வருகின்ன்றனர்.

குறிப்பாக ஆன்லைன் கல்வி முறையால் போதிய வசதிகள் இன்மையால் இதனை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

சூப்பர் அறிவிப்பு

சூப்பர் அறிவிப்பு

குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள அவர்களிடம் ஸ்மார்ட்போன் அல்லது டேப் வசதிகள் இருப்பதில்லை. இதனால் பலருக்கும் ஆன்லைன் கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இதற்கிடையில் இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனமான, வங்கி அல்லாத முத்தூட் பின்கார்ப் நிறுவனம் ஒரு சூப்பரான அறிவிப்பினை கொடுத்துள்ளது.

குறைந்தபட்ச தேவை

குறைந்தபட்ச தேவை

இது குறித்து தனது வலைதளத்தில் தெரிவித்துள்ள முத்தூர் பின் கார்ப் நிறுவனம், கொரோனா குழந்தைகளின் வகுப்பறை கற்றல்களை ஆன்லைன் வாயிலாக மாற்றியுள்ளது. இது குறைந்த பட்சம் ஸ்மார்ட்போன்கள், மடிக் கணினிகள், டேப்லெட்டுகள், பீசிக்கள் தங்கள் கல்வியை தொடர தேவையாக உள்ளது.

வித்யா தன் தங்க கடன் சலுகைகள்
 

வித்யா தன் தங்க கடன் சலுகைகள்

முத்தூட் ஃபின் கார்ப் நிறுவனத்தின் வித்யா தன் தங்க கடன், பெற்றோருக்கு மேற்கண்ட சாதனங்களை வாங்குவதற்கு ஆதரவாக அமையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வித்யா தன் தங்க கடன் முதல் 90 நாட்களுக்கு வட்டியில்லாமல் கடன் கொடுக்கிறது. 6 மாதங்கள் வரையில் அவகாசம், இதில் 10,000 ரூபாய் வரையில் கடன் வழங்கப்படுகிறது. இது கல்வி நோக்கங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

90 நாள் வட்டி இல்லை

90 நாள் வட்டி இல்லை

எனினும் இந்த கடனுக்கான வட்டி விகிதம் 90 நாட்களுக்கு இல்லை என்றாலும், 91 ஆவது நாளில் இருந்து வருடத்திற்கு 18% பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது. அதோடு இந்த வித்யா தன் தங்க கடனுக்கு செயலாக்க கட்டணமும் இல்லை. குறைந்த கே.ஓய்.சி ஆவண நடைமுறைகள் தான். இந்த கடன் வாங்க குழந்தையின் மாணவர் அடையாள அட்டை தேவை.

எங்கு அணுகுவது?

எங்கு அணுகுவது?

ஒரு குழந்தைக்கு ஓரு முறை மட்டுமே இந்த கடன் திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முதலில் வரும் 1 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டமானது இந்தியா முழுவதும் உள்ள முத்தூட் பின் கார்ப்பின் 3600க்கும் மேற்பட்ட கிளைகளிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாதிப்பு

மாணவர்கள் பாதிப்பு

மக்களின் வாழ்வாதாரத்தினை போலவே, குழந்தைகளின் கல்வியும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் பல மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வியை எட்ட போதிய வசதிகள் இல்லை. சில ஆதரங்களின் படி தொடக்க மற்றும் இடை நிலை பள்ளிகளில் சேர்க்கப்பட்ட கிட்டதட்ட 247 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என முத்தூட் பின் கார்பின் தலைவர் தாமஸ் ஜான் முத்தூட் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Muthoot fincorp launched vidya Dhan gold loans to support for students

Muthoot fincorp announces interest free gold loan schemes to support students
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X