இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான டாடா குழுமம் இதுவரை பார்த்திடாத வர்த்தகம், லாபம், வருவாய், வளர்ச்சியைக் கடந்த சில வருடத்தில் பதிவு செய்து வருகிறது.
இதைவிட முக்கியமாக டாடா குழுமம் தனது வர்த்தகத்தைப் பல ஆண்டுகளா பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியாமல் இருந்த நிலையில் கடந்த 3 வருடத்தில் ரீடைல் முதல் ஆட்டோமொபைல் வரையில் அனைத்து துறைகளிலும் வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது.
இந்தப் பெரும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கும் சந்திரேசகரனின் பதவியை முடிவு செய்யும் முக்கியக் கூட்டம் இன்று நடக்க உள்ளது.
டாடா பாம்பே ஹவுஸ்
டாடா குழுமத்தின் தலைமை அலுவலகமான பாம்பே ஹவுஸ்-ல் இன்று முக்கியமான உயர்மட்ட நிர்வாகக் குழு நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் நீண்ட காலத்திற்குப் பின் டாடா குழுமத்தின் சேர்மன் எமரிட்டஸ் ஆன ரத்தன் டாடாவும் கலந்துகொள்ள உள்ளார். இதனால் இக்கூட்டம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
என்.சந்திரசேகரன்
இக்கூட்டத்தின் டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருக்கும் என்.சந்திரசேகரன் அவர்களுக்கு மீண்டும் பணிக்காலம் நீட்டிப்பு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்தப் பணிக்கால நீட்டிப்புக்கு ஏற்கனவே டாடா டிரஸ்ட் நிர்வாகம் மற்றும் ரத்தன் டாடா ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதி முடிவு
இந்நிலையில் டாடா சன்ஸ் நிர்வாகக் குழு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் என்.சந்திரசேகரன் நியமிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். கடந்த 5 வருடத்தில் சந்திரசேகரன் செயல்பாடுகளை டாடா நிறுவனப் பங்குகளின் வளர்ச்சியின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஏர் இந்தியா உட்படப் பல நிறுவன கைப்பற்றல் மூலம் வர்த்தகம் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
சைரஸ் மிஸ்திரி - டாடா குழுமம்
சைரஸ் மிஸ்திரி - டாடா குழுமத்திற்கு மத்தியிலான பிரச்சனையின் மூலம் டாடா சன்ஸ் தலைவராக ரத்தன் டாடா இருந்தார். பல்வேறு காரணமாக ரத்தன் டாடா வெளியேற முடிவு செய்த நிலையில் அடுத்தத் தலைவரை தேர்வு செய்யும் பணி பல மாதங்களாக நடத்தப்பட்டது. ஆனால் அனைவருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த சந்திரசேகரன் தான் சிறந்த தேர்வாக இருக்கும் என அறிவித்தனர்.
ஜனவரி 2017 முதல்
இதன் வாயிலாக டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் அக்டோபர் 2016ல் சேர்ந்த சந்திரசேகரன், ஜனவரி 2017ல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆகப் பணியைத் துவங்கினார். இதைத் தொடர்ந்து டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டிசிஎஸ் போன்ற அனைத்து முக்கிய நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.
ஸ்டாரான சந்திரசேகரன்
சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவராகப் பதவியேற்றிய பின் டாடா குழும வளர்ச்சி தடையாகவும், அதிக நஷ்டத்தைக் கொடுக்கக் கூடிய வர்த்தகத்தைப் பிரிவுகளையும் மூடவும் விற்பனையும் செய்தார். இது பெரும் சர்ச்சையாக மாறினாலும், அடுத்த சில மாதத்திலேயே டாடா குழும நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைய துவங்கியது. இதில் முக்கியமாக ரீடைல் வர்த்தகத்தில் டாடா குழுமம் இறங்கியுள்ளது பாராட்டுக்குரியது.


Click it and Unblock the Notifications