தென்னிந்தியாவின் பிரபலமான மற்றும் பாரம்பரியமான துணிக்கடை நிறுவனம் நல்லி சில்க்ஸ். 1928ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஜவுளி மற்றும் சில்லரை வர்த்தகத்தில் முன்னணயில் உள்ளது. பட்டு சேலை எடுக்க வேண்டும் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நல்லி சில்க்ஸ் தான்.
அந்தளவுக்கு மக்கள் விரும்பும் பிராண்டாக நல்லி சில்க்ஸ் விளங்குகிறது. இந்த குடும்ப வணிகத்தில் நல்லி குழுமத்தின் 5வது தலைமுறை வாரிசான லாவண்யா நல்லி, நல்லி சில்க் சாரீஸின் துணை தலைவராக உள்ளார். சிறந்த பெண் தொழிலதிபர்களில் ஒருவரான லாவண்யா நல்லி வாழ்க்கை குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

லாவண்யா நல்லியின் குழுந்தை பருவம் சென்னையில் உள்ள அவரது தாத்தா பாட்டி வீட்டில் கழிந்தது. சென்னை அண்ணா பல்கலைககழக்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். 2005ல் நல்லி குழுமத்தின் நிர்வாகத்தில் சேர்ந்தார். அவர்தான் தனது குடும்ப வர்த்தகத்தில் சேர்ந்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவரை நல்லி குடும்பத்தை சேர்ந்த பெண்கள் யாரும் வர்த்தகத்தில் களம் இறங்கவில்லை. சுமார் 4 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். 2005 முதல் 2009 வரையிலான காலத்தில் அவர் நல்லி சில்க்ஸ் வருவாயை இரண்டு மடங்காக்கினார், கடைகளின் எண்ணிக்கையை 14ல் இருந்து 21ஆக உயர்த்தினார்.
இந்த சூழ்நிலையில் அவருக்கு மீண்டும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதனையடுத்து 2009ல் நிறுவன பொறுப்புகளை துறந்து விட்டு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ. படிக்க பறந்து விட்டார். அங்கு அபய் கோத்தாரியை முதல் முறையாக சந்தித்தார்.
முதலில் நட்பாக ஆரம்பித்த அவர்கள் சந்திப்பு பிறகு காதலாக மாறியது. 2011ல் அபய் கோத்தாரியை லாவண்யா நல்லி கரம் பிடித்தார். எம்.பி.ஏ. முடித்தவுடன் சிகாகோவில் உள்ள மெக்சின்சி அண்ட் கம்பெனியில் சுமார் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு அவர் இந்தியா திரும்பினார்.
இங்கு சும்மா இருக்க விரும்பவில்லை மற்றும் வருவாய்க்காக மைந்த்ரா நிறுவனத்தின் துணை தலைவராக பணியாற்றினார். 2015ல் அந்த நிறுவனத்தில் இருந்து விலகினார். 2016ல் மீண்டும் நல்லிக்கு திரும்பினார். நல்லியின் இ-காமர்ஸ் மற்றும் ஆம்னிசேனல் தளத்தின் துணைதலைவராக இருந்தார்.
தற்போது பெங்களூருவில் வசிக்கிறார். 39 வயதான இவருக்கு சில்லரை விற்பனை, உத்தி, செயல் மற்றும் இ காமர்ஸ் ஆகியவற்றில் 18 வருட அனுபவம் உள்ளது. தற்போது இவர் புதிய வணிக மேம்பாடு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள், சில்லரை விற்பனை கடை செயல்பாடுகள் மற்றும் தனியார் லேபிள்களில் கவனம் செலுத்துகிறார்.


Click it and Unblock the Notifications