சமீபத்தில் வே புரோட்டினை கொண்டு தயாரிக்கப்படும் இட்லி தோசை மாவை கர்நாடகா பால் கூட்டமைப்பு (KMF) அறிமுகம் செய்தது. இந்த இட்லி தோசை மாவுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்ததால்.. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து முன்னணி விரைவு வர்த்தக தளங்களிலும், சில்லறை விற்பனை நிலையங்களிலும் இந்த இட்லி தோசை மாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வே என்பது பாலில் இருந்து தயிர் மற்றும் பாலாடை கட்டி தயாரிக்கும் போது கிடைக்கும் திரவத்திலிருந்து எடுக்கப்படும் புரதமாகும். உடற்பயிற்சி செய்பவர்களால் புரதச்சத்துக்காக அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் வே புரோட்டீனும் ஒன்று.
கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி அன்று பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்ட நந்தினி இட்லி தோசை மாவில் 5 சதவீதம் வே ப்ரோடீன் உள்ளது. ஏற்கனவே இட்லி தோசை மாவு விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் அசல், எம்டிஆர், ஐடி போன்ற பிராண்டுகளுடன் நந்தினி இட்லி தோசை மாவும் அறிமுகமானது. தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 4600 கிலோ வரை இந்த இட்லி தோசை மாவு விற்பனையாகிறது. இதை அடுத்த 3 மாதங்களில் 15,000 கிலோவாக அதிகரிக்க KMF திட்டமிட்டுள்ளது.

சந்தையில் தற்போது நந்தினி மாவின் 450 கிராம் பேக்கின் விலை 40 ரூபாய்க்கும், 90 கிராம் பேக்கின் விலை 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஏப்ரல் மாதம் முதல் பிளிங்கிட், பிக்பாஸ்கெட் மற்றும் செப்டோ போன்ற ஈ-காமர்ஸ் மற்றும் விரைவு வர்த்தகத் தளங்களிலும் முக்கிய பல் பொருள் அங்காடிகளிலும் நந்தினி மாவு கிடைக்கும் என்று நிறுவனத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நந்தினி பிராண்டின் இட்லி தோசை மாவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் கர்நாடகா பால் கூட்டமைப்பின் உற்பத்தி திறனை ஒரு நாளைக்கு 5000 கிலோவில் இருந்து 10,000 கிலோவாக இரட்டிப்பாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்து கூடுதல் உற்பத்தி யூனிட்-களை அமைப்பதற்கான இடங்களையும் அடையாளம் கண்டு வருவதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
நந்தினி தோசை மாவின் அறிமுகத்தை தொடர்ந்து ஐடி பிரெஷ் ஃபுட் இன்னும் 4 புதிய தோசை மாவை அறிமுகம் செய்துள்ளது. புரதம் நிறைந்த இட்லி தோசை மாவு, ராகி திணையை கொண்டு உருவாக்கப்பட்ட இட்லி தோசை மாவு, பல தானியங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட தோசை மாவு என தங்களுடைய உற்பத்தியை பல்வகை படுத்தி வருகிறது.
சந்தையில் வரவேற்பு எப்படி இருக்கும்? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஆரம்பத்தில் KMF அதன் விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே தோசை மாவை வழங்கி வந்தது. ஆனால் தற்போது ஆன்லைன் டெலிவரி தளங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. "அனைத்து அங்காடிகள் மற்றும் விரைவு வர்த்தக தளங்களிலும் விரிவடைந்த உடன்.. எங்களுடைய விற்பனை 3 மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் போட்டியாளர்கள் எங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். சிலர் ஏற்கனவே புரதம் நிறைந்த இட்லி தோசை மாவை அறிமுகப்படுத்தி விட்டனர்", என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அடுத்த 2 மாதங்களில் KMF மைசூர், மங்களூர், தும்கூர் மற்றும் ஹுப்பள்ளி போன்ற நகரங்களுக்கும் இட்லி தோசை மாவை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த நகரங்களில் உள்ளூர் உற்பத்தி யூனிட்களை அமைக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications