இன்றைய டிஜிட்டல் உலகில் அனைவரும் இன்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பேஸ்புக், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களில் மக்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இவை பெரும்பாலான மக்களுக்கு பொழுதுபோக்காக இருக்கிறது, அதேசமயம் சிலருக்கு வருமானம் அளிக்கும் தொழிலாகவும் உள்ளது.
வீடியோக்கள் எடுத்து யூ டியூப்பில் அப்லோடு செய்து பல இளைஞர்கள் நினைத்து பார்க்க முடியாத வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் இஸ்ரேல்-பாலஸ்தீன இளைஞர் யூ டியூபரான நாஸ் டெய்லி என்ற நுசீர் யாசின்.

நுசீர் யாசின் 1,000 நாட்களுக்கு தினமும் ஒரு நிமிட வீடியோக்களை வெளியிட்டார். அதனால் அவரை நாஸ் டெய்லி என்று அழைக்கின்றனர். பங்கு தரகு உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளை வழங்கும் ஜீரோதோ நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் அண்மையில் போட்காஸ்டின் போது, தன்மய் பட், பிரஜத்தா கோலி, ரன்வீர் அல்லாபாடியா மற்றும் நுசீர் யாசின் போன்ற கன்டென்ட் கிரியேர்டர்களிடம் அவர்களின் வருமானம் குறித்து கேட்டார். அப்போது நுசீர் யாசின் தனது நிதி நிலவரம், வருமானம் உள்ளிட்ட தகவல்களை தெரிவித்தார்.
யாசின் தனது 30,000 டாலர் சேமிப்பில் வீடியோக்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டார். முதல் ஆண்டில் வருமானம் கிடைக்கவில்லை. இருப்பினும், 1,00,000 பாலோயர்ஸ் கிடைத்தவுடன், பல்வேறு வேலைகளில் இருந்து மாதம் 1,000 முதல் 2,000 டாலர் வரை வருமானம் வரத்தொடங்கியது.
பிராண்ட் ஒப்பந்தம் கிடைத்தபோது, அவர் 1,000 முதல் 2,000 டாலர் வரை வசூலித்தார். பேஸ்புக்கில் பணமாக்குதல் அறிமுகம் செய்யப்ப்ட்டது அவர் தனது சேனலில் இருந்து பணம் சம்பாதிக்க தொடங்கினார்.
அவருக்கு பேஸ்புக்கில் 10 லட்சம் பாலோயர்ஸ் இருந்தனர், இதனால் மாதம் 10,000 டாலர் சம்பாதித்தார். பேஸ்புக்கில் அவரது பாலோயர்ஸ் எண்ணிக்கை 10 லட்சத்தில் இருந்து 1 கோடியாக அதிகரித்தது. இதனையடுத்து பேஸ்புக் அவருக்கு ஒரு மாதத்துக்கு 30,000 டாலர் கொடுக்க தொடங்கியது.
பின்னர் அவரது பிராண்ட் ஒப்பந்தங்கள் வாயிலாக மாதத்துக்கு 30,000 டாலரும், பேசும் நிகழ்ச்சிகள் வாயிலாக ரூ.20,000 டாலரும் கிடைத்தது. ஆக அவர் ஒரு மாதத்துக்கு சராசரியாக 80,000 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 66 லட்சம்) வருமானம் வருகிறது. இதனால் அவர் தனது 26 வயதிலேயே கோடீஸ்வரரானார்.
அதன் பிறகு ஒரு நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தார், மற்றவர்களுக்கு வீடியோக்களை உருவாக்குதவன் மூலம் அவரது நிறுவனம் 20,000 டாலர் சம்பாதித்தது. இறுதியில் அவர் நாஸ் அகாடமி வகுப்புகள், நாஸ் உச்சி மாநாடு மற்றும் நாஸ் பயணங்கள் போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் தனது சமூகத்தை பணமாக்கத் தொடங்கினார்.
யாசினுக்கு தற்போது இரண்டு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் வாயிலாக மொத்தத்தில் 9,00,000 முதல் 10,000,00 டாலர் வரை லாபம் கிடைக்கிறது. யாசின் வருமானம் குறித்து கூறுகையில், கிரியேட்டர் பொருளாதாரத்தின அழகு என்னவென்றால் அது ஒரு நேர்கோட்டில் இருப்பதில்லை.
நீங்கள் ஒரு வேலையில் இருந்தால், ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளம் 10 சதவீதம் அதிகரித்து ஒரே நேர்கோட்டில் பயணிக்கும். ஆனால் நீங்கள் கன்டென்ட் கிரியேட்டராக இருந்தால் உங்கள் வருமானம் ராக்கெட் வேகத்தில் உயரலாம் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications