கொரோனா வைரஸ், தற்போது சும்மா இருந்த லே ஆஃப் பூதத்தை சொரிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
பல கம்பெனிகள், தங்கள் ஊழியர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாமல் லே ஆஃப் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் அதிகம் சிக்கி இருப்பவர்கள் ஐடி கம்பெனி ஊழியர்கள் தான்.
வழக்கம் போல, ஐடி துறையில் இந்த கொரோன வைரஸ் கொஞ்சம் அதிகமாக பிரச்சனைகளையே ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பிரச்சனைகளை சமாளிக்க நாஸ்காம் சில கோரிக்கைகளை நிதி அமைச்சகத்திடம் வைத்திருக்கிறது.
கோரிக்கைகள்
இந்த 2020 - 21 நிதி ஆண்டில் கட்டாயம் போனஸ் தருவதில் இருந்து விலக்கு அளிக்கச் சொல்லி அனுமதி கோரி இருப்பது, Work from Home செலவுகளை வியாபார செலவுகளாக கணக்கில் எடுத்துக் கொள்ள அனுமதி கோரி இருப்பது, Paid leave-க்கு கொடுக்கும் சம்பளத்தை திருப்பி கொடுக்கச் சொல்லி அரசிடம் கேட்டு இருப்பது... என பல கோரிக்கைகளை வைத்திருக்கிறது நாஸ்காம்.
கார்ப்பரேட் வரி
அதோடு, 2020 - 21 நிதி ஆண்டுக்கான கார்ப்பரேட் வரியை 22 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக குறைக்கச் சொல்லி இருக்கிறது நாஸ்காம். இந்த இக்கட்டான சூழலில் வரிச் சுமைகளைக் குறைந்தால், கம்பெனிகள் தங்கள் மற்ற செலவுகளைச் செய்ய வசதியாக இருக்கும் என்கிறார்கள் நஆஸ்காம் தரப்பினர்கள்.
ஜிஎஸ்டி
அதோடு fiber connectivity, broadband, cellular data, cloud services, laptops, computers தொடர்பாக ஐடி சேவைகளை வழங்குவது மற்றும் பொருட்களை விற்பதற்கு 18 சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி எஸ் டி) வசூலிக்கிறார்களாம். இதை 5 சதவிகிதமாக குறைக்கச் சொல்லிக் கேட்டு இருக்கிறது நாஸ்காம் தரப்பு.
பாக்கி தொகை
இது போல, கம்பெனிகள் கையில் காசு புழங்க (குறிப்பாக சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு), மத்திய மற்றும் மாநில அரசுகள், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் எல்லாம் கம்பெனிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகைகளை 15 நாட்களுக்குள் கொடுக்குமாறும் அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.
வரி ஒத்தி வைப்பு
அதோடு, வருமான வரித் துறையினருக்கு, முன் கூட்டி செலுத்தும் வரி (Advance Tax) தேதி, முதல் காலாண்டுக்கு, ஜூன் 15, 2020 ஆக இருக்கிறது. இந்த தேதியை ஒத்திப் போடுமாறும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள் ஐடி மற்றும் ஐடி சேவை சார்ந்த கம்பெனிகளின் கூட்டமைப்புச் சங்கமான நாஸ்காம். இதை எல்லாம், இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அரசு செய்யுமா? அரசுக்கு தான் வெளிச்சம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications