அதானி குழுமம் செய்த பல்வேறு பரிமாற்றங்களின் ஆதாரங்களை சேகரித்த OCCRP அமைப்பு தி கார்டியன் மற்றும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பகிர்ந்துள்ளது OCCRP அமைப்பு. Organised Crime and Corruption Reporting Project என்பதன் சுருக்கமே OCCRP.
OCCRP செய்த ஆய்வில் மொரிஷியஸ் நாட்டு நிறுவனங்கள் வாயிலாக மறைமுக நிதியை பயன்படுத்தி இருவர் அதானி குழும பங்குகளை சுமார் 430 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகைக்கு வாங்கியுள்ளதாகவும், இது இரண்டு வழக்கில் தொடர்புடையாக தெரிவித்துள்ளது.

யார் இந்த இருவர்..? நாசர் அலி ஷபன் அஹ்லி மற்றும் சாங் சுங்-லிங் இந்த இருவரும் அதானி குடும்பத்துடன் நீண்ட காலமாக வர்த்தக தொடர்பும், அதானி குழும நிறுவனத்தில் ஒரு காலக்கட்டத்தில் டைரக்டராக இருந்துள்ளனர். மேலும் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய நிறுவனங்களிலும் இவர்களுக்கு தொடர்பு உண்டு என OCCRP செய்த ஆய்வில் தெரிவித்துள்ளது.
நாசர் அலி ஷபன் அஹ்லி மற்றும் சாங் சுங்-லிங் தலைமை வகிக்கும் மொரிஷியஸ் நாட்டு நிறுவனங்கள் வாயிலாக சுமார் 430 மில்லியன் டாலர் மதிப்பிலான மறைமுக நிதியை பயன்படுத்தி இருவர் அதானி குழும பங்குகளை வாங்கியும் விற்றும் உள்ளனர். இதன் மூலம் அதிகப்படியான லாபத்தை இவர்களின் நிறுவனங்கள் பெற்றுள்ளது.
இதில் முக்கியமான டிவிஸ்ட்-ஏ நாசர் அலி ஷபன் அஹ்லி மற்றும் சாங் சுங்-லிங் தலைமை வகிக்கும் மொரிஷியஸ் நாட்டு நிறுவனங்களுக்கு கட்டணம் அடிப்படையில் முதலீட்டு ஆலோசனை வழங்குவதும், முதலீட்டுக்கு பொறுப்பாக இருப்பதும் வினோத் அதானியின் நிறுவனங்கள் தான் என OCCRP திரட்டிய ஆதாரங்கள் கூறுகிறது.
நாசர் மற்றும் சாங் சுங் ஆகியோரின் நிறுவனங்கள் வினோத் அதானியின் நிறுவனங்களின் ஆலோசனை படி இயங்கும் கட்டமைப்பு இந்திய விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்ற கேள்வி எழுவதாகவும், இந்த பங்குகளும் சேர்த்தால் அதானி குரூப்-ன் உள்நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் 75 சதவீதத்திற்கும் அதிகமான பங்கீட்டை கொண்டு இருக்கும்.
ஒரு நிறுவனம் 75 சதவீதத்திற்கும் அதிகமாக பங்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது விதிமீறல் மட்டும் அல்லாமல், பங்கு விலையை முறைகேடாக உயர்த்தும் ஒரு முயற்சியாகும் என இந்திய பங்குச்சந்தை வல்லுனர் மற்றும் வெளிப்படைதன்மை வழக்கறிஞர் ஆன அருண் அகர்வால் தெரிவித்ததாக OCCRP தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மறைமுகமாக நிறுவனத்தின் உரிமையாளர்களே அதிகளவிலான பங்குகளை வாங்குவது மூலம் பங்குச்சந்தையில் அதானி பங்குகளுக்கு அதிகப்படியான தட்டுப்பாடு ஏற்பட்டு, செயற்கையாக பங்கு விலையும், சந்தை மதிப்பீடும் அதிகரிக்க முடியும். இதை ஆதாரமாக காட்டி அதானி குழுமம் சிறப்பாக இயங்கி வருகிறது என்ற பிம்பத்தை காட்டி அதிகப்படியான கடன்களை வாங்க முடியும் எனவும் அருண் அகர்வால் தெரிவித்ததாக OCCRP தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications