ஆன்லைன் போட்டி அதிகமாகிடுச்சி.. சிறு கடைகளை காப்பாற்ற வருகிறது புது திட்டம்

டெல்லி: சிறிய கடைகளுக்கு தேசிய சில்லறை விற்பனையக கட்டமைப்பை மத்திய அரசு தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் வணிக போட்டியை சிறப்பாக சமாளிக்க இந்த திட்டத்தால் முடியும் என்று அரசு நம்புகிறது.

இந்த திட்டத்தின்கீழ், ஒரு முறை பதிவு கட்டணம், மூலதனத்திற்கான சிறு கடன்கள் மற்றும் மின்னணு பேமென்ட் ஏற்றுக்கொள்வதற்கான வசதி ஆகியவை வழங்கப்படும்.

"மாநிலங்கள் பின்பற்றக்கூடிய ஒரு தேசிய பிரேம் ஒர்க் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன," என்று ஒரு அதிகாரி உறுதி செய்துள்ளார்.

விதிமுறை மாற்றம்

விதிமுறை மாற்றம்

சில்லறை வணிகம் என்பது மாநிலப் பட்டியலில் வரக்கூடிய துறை. மாநிலங்கள் ஒவ்வொன்றும் இந்தத் துறை தொடர்பாக மாறுபட்ட கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. இந்தியாவின் 2.7 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% உள்நாட்டு வர்த்தத்திலிருந்து கிடைக்கிறது. நாடு முழுவதும் 60 மில்லியனுக்கும் அதிகமான வணிக நிறுவனங்கள் இதற்கு பங்களிக்கிறது. இவை அனைத்துமே ஆன்லைன் வியாபாரத்தால் சவாலை எதிர்கொண்டுள்ளன.

25 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு

25 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு

உள்நாட்டு வர்த்தகம் சுமார் 25 கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. ஆண்டுதோறும் 15% வளர்ச்சியுடன் உள்ள துறை இது. எனவே, இதை காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை அரசு உணர்ந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கான பதிவு சட்டங்கள் உள்ளன, அதன் கீழ் அத்தகைய கடைகள் பதிவு செய்யப்படுகின்றன.

ஒரே பதிவு

ஒரே பதிவு

பதிவுக் கொள்கை, கட்டணம் மற்றும் பிற விஷயங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. சில நிறுவனங்களில் ஆண்டுதோறும் அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பதிவு செய்வது கட்டாயமாக உள்ளது. இப்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, செலவினங்களைக் குறைப்பதற்காக எளிமைப்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆன்லைனில் ஒரே ஒருமுறை பதிவு செய்தால் போதும், அதன்பிறகு பதிவு செய்ய தேவையில்லை என்பது இந்த புது திட்டத்தின் முக்கியம்சங்களில் ஒன்றாகும்.

டிஜிட்டல் பணம்

டிஜிட்டல் பணம்

இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறிய கடை உரிமையாளர்கள் படும் கஷ்டங்களை நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம். அதை சரி செய்ய முயற்சிக்கிறோம்" என்றார். சிறு கடன்கள் வழங்குவது மற்றும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறைக்கு இவர்களை கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

வசதிகள் அதிகரிப்பு

வசதிகள் அதிகரிப்பு

இப்போதைய சூழ்நிலையில், 70 மில்லியன், சிறிய வணிக நிறுவனங்களில், 65 சதவீதம் கடைகள் டிஜிட்டல் வசதியில் இணைந்துள்ளன. கடைகள் அனைத்தின் விவரங்களையும், மாநில அரசு, தேசிய சில்லரை வணிக பிரேம்ஒர்க்கிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது இதன் முக்கிய நிபந்தனையாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+