பழைய வாகனங்களை ஸ்கிராப்பிங் செய்து புதிய வாகனத்தினை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சாலை வரி குறைப்பு குறித்த அறிவிப்பினை அரசு விரைவில் அறிவிக்கலாம்.
இதனை மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மேலும் பழைய வாகனத்தினை கொடுத்து புதிய வாகனத்தினை வாங்கும் வாடிக்கையாளார்களுக்கு, வாகன நிறுவனங்கள் 5% தள்ளுபடியினை கொடுக்கலாம் என வலியுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தேவையை அதிகரிக்கும்
பழைய வாகனங்களை அழிக்கும் இந்த திட்டம், நிச்சயம் புதிய வாகனங்களின் தேவையை ஊக்குவிக்கும். இது நொடிந்து போயிருக்கும் ஆட்டோமொபைல் துறையினருக்கு ஊக்குவிப்பு அளிக்கும் வகையில் அமையும். மொத்தத்தில் பழைய வாகன அழிப்பு திட்டம் வாகன துறைக்கு ஒரு நல்ல விஷயமே.
எவ்வளவு குறைக்கலாம்
இது குறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் விரைவில் இந்த வரி குறைப்பு பற்றிய அறிவிப்பு வரலாம். வணிக வாகனங்களுக்கான சாலை வரியில் 15% வரையிலும், இதே தனி நபர் வாகனங்களுக்கு 25% வரையில் வரியில் குறைக்கப்பட பரிந்துரைக்கப்பட்டது. இது குறித்து சில மாநிலங்கள் வரியினை குறைத்தாலும், அரசியலமைப்பு விதிகளின் படி மத்திய அரசு அவற்றை திருப்திபடுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
விற்பனை அதிகரிக்கும்
அரசின் வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையினை அமல்படுத்துவதால் வாகன விற்பனையானது குறைந்தபட்சம் 25 - 30% வரையில் அதிகரிக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாயில், பாதி வரி விகிதம் மாநில அரசுகளுக்கே கிடைக்கும். ஆக மாநில அரசுகள் ஒருங்கிணைந்து இதனை செயல்படுத்த வேண்டும்.
மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்
எங்களின் குறிக்கோள் மாசுபாட்டினை குறைப்பதே. இதன் மூலம் கணிசமான நிலையான வளர்ச்சி விகிதம் இருக்கும். இதனால் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். ஆக இது ஒரு பொது நலன் சார்ந்த ஒரு பிரச்சனை. ஆக அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் என நம்புகிறேன் என நிதின் கட்கரி கூறியுள்ளார்.
வருவாய் இழப்பு இருக்காது
அரசின் இந்த திட்டத்தின் ,மூலம் வருவாய் இழப்பு என்பது இருக்காது. மாறாக பழைய வாகனங்களை மாற்றி விட்டு, புதிய வாகனங்கள் வாங்கும்போது அரசுக்கு வருமானம் கிடைக்கும். இது மத்திய மாநில அரசுக்குகளுக்கு ஏற்றதொரு கொள்கை தான். இதன் மூலம வாகனம் வாங்குபவர்களுக்கும் 5% தள்ளுபடி கொடுக்க வாகன நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளோம். இதன் மூலம் வாகனம் வாங்குபவருக்கும் சில சலுகைகள் கிடைக்கும்.
ஸ்கிராப்பிங் மையம் எங்கெங்கு?
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஸ்கிராப்பிங் மையம் இருக்கும். மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டங்களில் ஐந்து ஸ்கிராப்பிங் செண்டர்களை அமைக்கலாம். ஒவ்வொரு நூறு கிலோ மீட்டருக்கும் ஒரு வாகன அழிப்பு மையம் இல்லையென்றால், அது பழைய வாகனங்களை அழிப்பு மையத்திற்கு எடுத்து செல்வது சாத்தியமாகாது. வாகன அழிப்பு திட்டம் 18% வருமானத்தினை அதிகரிக்கும் என்று கட்கரி கூறியுள்ளார்.
ஆட்டோமொபைல் துறையினர் வரவேற்பு
பல ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையினரின் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்த வாகன அழிப்பு திட்டம், கடந்த பட்ஜெட் 2021ல் அறிவிக்கப்பட்டது. இது ஆட்டோமொபைல் துறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது எனலாம். இந்த நிலையில் வாகன விற்பனை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், புதிய வாகன விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசுமை வரி அறிவிப்பு
எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில், சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம், பசுமை வரியாகப் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இதே தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது இந்த பசுமை வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது நினைவு கூறத்தக்கது?
அதோடு 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்வதற்கும் முன்னதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த வரி விதிப்பு குறிப்பாக அதிகம் மாசடைந்த நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிகப்படியான பசுமை வரி (சாலை வரியில் 50%) விதிக்கப்படும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பு இது தான்
வாகன துறையின் வருவாய் தற்போது சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, வாகன அழிப்பு திட்டமானது இதனை 30% அதிகரித்து, 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 1.45 லட்சம் கோடியாக இருக்கும் உதிரி பாகங்கள் ஏற்றுமதி, 3 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என நிதின் கட்கரி முன்னதாக ஒரு அறிக்கையில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications