உலோகங்கள், எனர்ஜி,சுரங்கம் உள்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் நிறுவனம் நவா லிமிடெட். இந்நிறுவனம் வலுவான வர்த்தக வளர்ச்சி மற்றும் சிறப்பான நிதி நிலை முடிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மேலும், நீண்ட கால அடிப்படையில், இந்நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் அளித்து வருவதால் சந்தையில் இந்நிறுவன பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
நவா லிமிடெட் நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.1,467.58 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.219 கோடி சம்பாதித்துள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.279.96 கோடியும், நிகர லாபமாக ரூ.47.38 கோடியும் ஈட்டியுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் இந்நிறுவனம் தொடர்ந்து நல்ல வருவாய் மற்றும் லாபம் ஈட்டி வருவதை வெளிப்படுத்துகிறது.

நீண்டகால அடிப்படையில் நவா லிமிடெட் பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 1,000 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை பல மடங்கு உயர்ந்து ரூ.420ஐ எட்டியுள்ளது. 2023 பிப்ரவரியில் நவா லிமிடெட் பங்கு விலை ரூ.130-135 என்ற அளவில் இருந்தது.
2024 செப்டம்பர் 18ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே நவா லிமிடெட் பங்கு புதிய 52 வார உச்ச விலையான ரூ.673.35ஐ எட்டியது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை 0.60 சதவீதம் குறைந்து ரூ.419.90ஆக இருந்தது. தற்போது நவா லிமிடெட் பங்கு அதன் 52 வார உச்சவிலையை காட்டிலும் சுமார் 37 சதவீதம் குறைவாக உள்ளது. இது இந்நிறுவன பங்கு வீழ்ச்சி மண்டலத்தில் இரு்ப்பதை காட்டுகிறது.
கடந்த சில தினங்களுக்கு நவா லிமிடெட் நிறுவனம் பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தை பரிசீலிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இது தொடர்பாக பிப்ரவரி 19ம் தேதியன்று (நேற்று) இயக்குனர்கள் குழு நடைபெறும் என்று அண்மையில் தகவல் வெளியானது. பங்குகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பதன் மூலம் நவா நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வெகுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்நிறுவனம் பங்குகளை திரும்ப பெறுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக நிறுவனங்கள், பங்குகளை திரும்ப பெறும்போது, சந்தை விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு முதலீட்டாளர்களிடம் வாங்கும்.
Story written by: Subramanian
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications