மும்பை: புனேவை சேர்ந்த நவ்நாத் யெவாலே டீ விற்பனை மூலம் மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.
எளிமையான தொழிலாக இருந்தாலும் அதனை முழு மனதோடு நீங்கள் செய்தால் அது உங்களை கோடீஸ்வரனாக்கும். அதற்கு நல்ல எடுத்துக்காட்டு புனேவை சேர்ந்த டீ கடை உரிமையாளர் நவ்நாத் யெவாலே.
இவர் தேநீர் விற்பனை மூலம் மட்டுமே மாதத்துக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார். இவரின் கதை இளைஞர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும். மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த கடினமாக உழைக்கும் ஒரு டீ கடை வியாபாரியின் மகன் நவ்நாத் யெவாலே. நடுத்தர வர்த்தகம் குடும்பம்தான் நவ்நாத் யெவாலே குடும்பம்.

நவ்நாத் யெவாலேவின் தந்தை மரணத்திற்கு பிறகு குடும்பத்தின் நிதி நிலைமை மோசமடைந்தது. இதனால் பிழைப்புக்கு வேறு வழிகளை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து வேலை செல்ல தொடங்கினார். இருப்பினும் அவருக்கு டீ வியாபாரத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. நகரில் டீ பிரியர்கள் ஏராளமாக இருக்கிறார்கள், நல்ல தேநீர் கடைகளால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்பதையும் நவ்நாத் யெவாலே உணர்ந்தார்.
இதனையடுத்து யெவாலேவும் அவரது சகோதரர்களும் டீ வர்த்தகத்தை தொடங்க முடிவு செய்தனர். அதற்காக உடனே அவர்கள் தொழில் இறங்கவில்லை. தேநீர் குறித்து பல வருட ஆய்வு செய்தனர் மற்றும் நான்கு ஆண்டுகள் தேநீர் தொழிலை கற்றனர். இறுதியில், நவ்நாத் யெவாலே 2011ம் ஆண்டில் யெவாலே டீ ஹவுஸ் என்ற டீ கடையை தொடங்கினார். நவ்நாத் யெவாலே தனது வேலையை ராஜினாமா செய்தார், தனது சேமிப்பு முழுவதையும் யெவாலே டீ கடையில் முதலீடு செய்தார். நவ்நாத் யெவாலே நம்பிக்கை வீண்போகவில்லை.
யெவாலே டீ ஹவுஸ் மக்கள் மனதில் இடம் பிடித்தது. தங்களுக்கு பிடித்தமான தேநீரை பருக வாடிக்கையாளர்கள் குவிந்தனர். காலப்போக்கில் அவரது டீ கடை வளர்ச்சி கண்டது. நவ்நாத் யெவாலே நகரில் மேலும் இரண்டு டீ ஹவுஸ்களை தொடங்கினார். 2018ல் யெவாலே டீ ஹவுஸ் கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்தாக கூறப்படுகிறது. நவ்நாத் யெவாலே மாதத்துக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டினார். யெவாலே டீ ஹவுஸில் தேநீர், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. நவ்நாத் யெவாலே தனது வர்த்தகத்தை பல இந்தியா நகரங்கள் விரிவுப்படுத்தி, உலகம் முழுவதும் தான் அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.


Click it and Unblock the Notifications