ஆபத்து காலத்தில் உதவும் என்பதற்காக தான் நாம் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்கிறோம். அப்படி நமக்கு தேவைப்படும் போது பணம் கிடைக்கவில்லை என்றால் பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது. சிலர் காப்பீடு நிறுவனங்களை எதிர்த்து போராடி தங்கள் உரிமையை பெற்று மற்றவர்களுக்கு முன் உதாரணமாகின்றனர். அப்படி ஒரு உண்மை கதை தான் இது.
5 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த தீர்ப்பு: தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் எல்ஐசிக்கு எதிராக தொடரப்பட்ட ஒரு வழக்கில் முக்கியமான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மார்பக புற்றுநோயால் மனைவியை இழந்த கணவர், தங்களுக்கு உரிய காப்பீடு தொகையை செலுத்துமாறு எல்ஐசி -இடம் கோரிக்கை வைத்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது.
அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் அந்த நபருக்கு 1.57 கோடி ரூபாய் வழங்க எல்ஐசிக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கியமான நிகழ்வுகளை வரிசையாக பார்க்கலாம்.
2016, பிப்ரவரி 6 - சம்பந்தப்பட்ட பெண் எல்ஐசியில் மருத்துவ காப்பீடு கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.
2016, மார்ச் 3 - எல்ஐசி அவருக்கு மருத்துவ சோதனைகளை பரிந்துரைக்கிறது.
2016, மார்ச் 29 - மருத்துவ சோதனை அறிக்கைகளை பெற்ற பிறகு, எல்ஐசி அவருக்கு மருத்துவ காப்பீடு கொள்கை பெற ஒப்புதல் அளிக்கிறது. அதே நாளில் எதிர்பாரா விதமாக அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
2016, மார்ச் 30 - 7 லட்சம் ரூபாய் ப்ரீமியம் கட்டினால் 1 கோடி ரூபாய் காப்பீடு கிடைக்கும் என்பதே அந்த திட்டம். எனவே அடுத்த நாளே ப்ரீமியம் தொகை 7 லட்சம் செலுத்தப்பட்டு, எல்ஐசி ரசீதும் தந்திருக்கிறது. அதே நாளில் அந்த பெண்ணுக்கு புற்றுநோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனை சார்பில் பையாப்சி சோதனை செய்யப்படுகிறது.
2017 மார்ச் 30 - இந்த நிலையில் ஓராண்டு கழித்து அவர்கள் மீண்டும் பாலிசியை புதுப்பித்துள்ளனர்.
2017 ஏப்ரல் 28 - எதிர்பாராத விதமாக அந்த பெண் மார்பகப் புற்றுநோயால் இறக்கிறார். இதனை அடுத்து அந்த பெண்ணின் கணவர் காப்பீடு தொகையை வழங்கும்படி விண்ணப்பம் செய்கிறார்.
2018 , மார்ச் 8 - அந்த பெண்ணின் கணவர் முன் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்து காப்பீட்டை தர மறுக்கிறது எல் ஐ சி நிறுவனம். நோய் இருந்ததை தெரிவிக்காதது தவறு
எனவே அந்த நபர் தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்கிறார்.
அதில் பாலிசி எடுக்கும் போதோ அல்லது புதுப்பிக்கும் போதோ அந்த பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறது என அவர்கள் தெரிவிக்கவில்லை, பாலிசி ஒப்பந்தப்படி இது விதிகளை மீறியதாக கருதப்படும் எனவே காப்பீட்டை தர முடியாது என எல்ஐசி வாதத்தை முன் வைத்தது.
மேலும் புற்றுநோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனைக்கு சென்றது என்பன போன்ற எந்த விவரங்களை தெரிவிக்காதது நுகர்வோரின் தவறு என்றும் வாதிட்டது.
ரூ.1.57 கோடி வழங்க உத்தரவு: ஆனால், பாலிசி எடுத்த தேதியில் அவருக்கு நோய் இருப்பது உறுதியாகவில்லை அதற்கான மருத்துவ சான்றிதழே சான்று என அந்த கணவர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், பாலிசி எடுக்கும் போதும், பாலிசி காலத்தின் போதும் உடல்நிலை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டியது கட்டாயம் .
ஆனால், அந்த பாலிசி எடுத்த 2016 மார்ச் 30இல் அவர்களுக்கு புற்றுநோய் இருந்தது தெரியவில்லை என்பதை எல்ஐசி ஏற்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. மேலும் குறைபாடான சேவை வழங்கியது, பாதிக்கப்பட்டவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது, ஆகிய காரணங்களால் 1.57 கோடி ரூபாயை அவருக்கு வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications