இந்திய தேர்தல் முடிவுகள் வெளியாகி பிஜேபி பெரும்பான்மையை இழந்து கூட்டணியில் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் அதிகம் நம்பியிருந்த மோடி ஸ்டாக் எனப்படும் மோடியின் ஆட்சி காலத்தில் அரசின் திட்டம், கொள்கைகள் மூலம் அதிகம் லாபம் அடைந்த பங்குகளை CLSA நிறுவனம் பட்டியலிட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய பயனாளிகளில் ஒன்றாக இருந்தது பொதுத்துறை நிறுவனங்கள் (PSU). இந்த காலகட்டத்தில் பல PSU பங்குகளின் பன்மடங்கு உயர்வு, முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அளிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

NDA கூட்டணி மூன்றாவது ஆட்சிக் காலத்தைப் பெற்றிருந்தாலும், எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்ற போதிலும், இந்த அரசு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் தங்களுடைய வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் எனச் சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதனால் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் லாபம் பார்க்க வேண்டும் எனில் அரசு நிறுவனங்கள் சரியான தேர்வாக இருக்காது என்பது தான் தற்போது நிலவும் கருத்து. ஜூன் 4 ஆம் தேதி வர்த்தகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் நம்பிய மோடி ஸ்டாக்ஸ் பட்டியலில் அதிகப்படியான பங்குகள் இருக்கும் நிஃப்டி PSE குறியீடு 14 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
NDA 3வது முறையாக ஆட்சி அமைக்கும் வேளையில், இந்தியப் பங்குச்சந்தையின் நீண்ட கால கண்ணோட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தாலும், தற்போது பங்கு விலைகள் அதிக மதிப்பீட்டில் இருக்கும் காரணத்தால் குறுகிய காலத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து லாபத்தைப் பதிவு செய்யும் முயற்சி நடக்க வாய்ப்பு உள்ளது என்று சுவாஸ்திகா இன்வெஸ்ட்மார்ட்டின் ஆராய்ச்சித் தலைவர் சந்தோஷ் மீனா தெரிவித்துள்ளார்.
ஆனால் எம்கே குளோபல் நிறுவனம் தற்போது முதலீட்டாளர்கள் தள்ளியிருக்க வேண்டிய பங்குகள் என்றால் அது பொதுத்துறை பங்குகள் தான், இதோடு நிற்காமல் பங்குச்சந்தை சரியும் எனவும் கணித்துள்ளது. மேலும் குறுகிய காலத்திற்குப் பங்குச்சந்தை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தக் கணிப்பு அனைத்தும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) எதிர்பார்க்கப்பட்ட அளவு வெற்றி பெறாத காரணத்தால், பங்குச்சந்தையில் இன்று BSE CPSE குறியீடு 3,800.71 புள்ளிகள் முதல் 3,523.73 புள்ளிகள் வரையில் சரிந்து தற்போது 1 சதவீத உயர்வில் வர்த்தகமாகி வருகிறது.
மோடியின் கடந்த 2 ஆட்சியில் சுயசார்பு, ஆத்மநிர்பர் திட்டம் போன்ற கொள்கை காரணமாகச் சமீப காலங்களில் PSUக்களின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பங்குச்சந்தையில் PSU குறியீடு கிட்டத்தட்ட 200% உயர்ந்துள்ளது, இந்த தேர்தல் காலத்தில் மட்டும், பொதுத்துறை பங்குகள் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளது.
உலகளாவிய தரகு நிறுவனமான CLSA, மோடியின் கொள்கைகளின் நேரடி பயனாளிகளாகக் கருதப்படும் 54 நிறுவனங்கள் எது..? இந்த 54 நிறுவனங்களில் பாதிக்கும் அதிகமானது பாதுகாப்புத் துறையைச் சார்ந்தது.
பாதுகாப்பு மற்றும் உற்பத்தி: HAL, ஹிந்துஸ்தான் காப்பர், NALCO, பாரத் எலக்ட்ரானிக்ஸ், கம்மின்ஸ் இந்தியா, சீமென்ஸ், ABB இந்தியா, SAIL, BHEL, பாரத் ஃபோர்ஜ்
இன்பராஸ்டக்சர் மற்றும் போக்குவரத்து: இன்டஸ் டவர்ஸ், ஜிஎம்ஆர் விமான நிலையங்கள், ஐஆர்சிடிசி, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
பவர் மற்றும் எனர்ஜி: NTPC, NHPC, PFC, REC, Tata Power, HPCL, GAIL, JSPL, Power Grid Corporation, ONGC, Coal India, Petronet LNG, BPCL, IOCL
வங்கி & நிதி: SBI, PNB, கனரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா
டெலிகாம்: பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா, இண்டஸ் டவர்ஸ்
மற்றவை: அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி, இந்தியன் ஹோட்டல்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல்&டி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்ரீ சிமெண்ட், தி இந்தியா சிமெண்ட்ஸ், டால்மியா பாரத், தி ராம்கோ சிமெண்ட்ஸ்


Click it and Unblock the Notifications