மொத்த நேரடி வரி வசூல் விகிதமானது செப்டம்பர் 22, நிலவரப்படி, 5,70,568 கோடி ரூபாயாகும். இதே முந்தைய ஆண்டில் இந்த வசூல் விகிதமானது 3,27,174 கோடி ரூபாயாகும்.
முந்தைய நிதியாண்டினை காட்டிலும், 2021 - 22ம் நிதியாண்டிற்கான நிகர நேரடி வரி வசூல் 74%க்கும் மேலாக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த வரி வசூல் (பணத்தை திரும்ப செலுத்துவதற்கு முன்) 6,45,679 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய 2020- 21ம் நிதியாண்டில் 4,39,242 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2020 - 21ம் நிதியாண்டில் 47% வளர்ச்சி கண்டிருந்தது.

இதே செப்டம்பர் 22 நிலவரப்படி மொத்த வரி வசூல் விகிதமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 27% வளர்ச்சி கண்டுள்ளது. இந்த 2019 - 20ம் நிதியாண்டில் இந்த நிகர வசூல் விகிதமானது 4,48,976 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது.
மொத்த வரி வசூல் (பணத்தை திரும்ப செலுத்துவதற்கு முன்) 6,45,679 கோடி ரூபாயில், 3,58,806 கோடி ரூபாய் கார்ப்பரேஷன் வரியாகும். இதில் தனிப்பட்ட வருமான வரி உள்ளிட்ட பாதுகாப்பு பரிவர்த்தனை வரி 2,86,873 கோடி ரூபாயாகும்.
2021 - 22ம் நிதியாண்டிற்கான முன் கூட்டியேயான வரி வசூல் செப்டம்பர் 22 நிலவரப்படி, 2,53,353 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 56% வளர்ச்சி கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மிகவும் சவாலான நிலைக்கு மத்தியில் கூட இரண்டாவது காலாண்டில் முன் கூட்டியே செலுத்தப்படும் வரி விகிதமானது 51.50% வளர்ச்சி கண்டுள்ளது.
இதில் திரும்ப செலுத்தப்பட்ட வரி விகிதமானது 75,111 கோடி ரூபாயாகவும் உள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications