டெல்லி: இளைஞர்கள் அனைவரும் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்போசிஸ் நாராயண மூர்த்தி சொன்ன கருத்துகளை நெட்டின்சகள் வைத்துச் செய்து வருகிறார்கள்.
இந்த நவீனக் காலத்தில் வேலை செய்யும் முறை என்பது தலைகீழாக மாறியிருக்கிறது என்றே சொல்லலாம். போட்டி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நீண்ட நேரம் வேலை செய்வது என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறுகிறது. வேலைக்கும் வீட்டிலும் நாம் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

வேலையில் அதிக கவனம் செலுத்தினால் குடும்பத்துடன் நம்மால் அதிக நேரம் செலவழிக்க முடியாது என்றும் இது குடும்ப உறவுகளைப் பாதிக்கும் என மனநல வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதேநேரம் தொழில்முனைவோரின் கருத்துகள் இதற்கு நேர்மாறாகவே இருக்கிறது.
நாராயண மூர்த்தி: இப்படி வேலை நேரத்திற்கும் மற்றும் குடும்ப உறவுகளுக்காக நாம் செலவழிக்கும் நேரம் குறித்த விவாதம் என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.இந்தச் சூழலில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில் இது தொடர்பாகக் கூறிய கருத்துகள் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. கடந்த 20, 30 ஆண்டுகளில் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்த நாடுகளுடன் நாம் போட்டிப் போட வேண்டும் என்றால் நமது இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று நாராயண மூர்த்தி கூறியிருந்தார்.

'தி ரெக்கார்ட்' என்ற பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய நாராயண மூர்த்தி, "உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது இந்தியாவின் வேலை உற்பத்தித் திறன் மிகக் குறைவாக இருக்கிறது. நாம் நமது வேலை உற்பத்தித்திறனை மேம்படுத்தாத வரை, அரசு நிர்வாகத்தில் ஊழல் குறையாத வரை, அரசு நிர்வாகம் முடிவை எடுப்பதில் தாமதத்தைக் குறைக்காத வரை நம்மால் மற்ற உலக நாடுகளுடன் போட்டிப் போட முடியாது. அந்த நாடுகள் கடந்த 20, 30 ஆண்டுகளில் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளன" என்று அவர் தெரிவித்தார்.
விமர்சனம்: அவரது இந்தக் கருத்து தான் சர்ச்சையானது. அவர் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். இரண்டு நாட்கள் வார விடுமுறை எடுத்துவிட்டால்.. 70 மணி நேரம் வேலை செய்ய 5 நாட்களுக்கு நாம் 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இத்துடன் வேலைக்குப் போகும் நேரம், திரும்பும் நேரம் என்று அதற்கும் ஓரிரு மணி நேரம் போய்விடும். பிறகு சாப்பிடுவது, தூங்குவதற்கே நேரம் பத்தாது என்ற போது குடும்பத்தினருடன் எப்படி நேரம் செலவழிக்க முடியும் என்பதே நெட்டிசன்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது.
நாராயண மூர்த்தியின் இந்தக் கருத்துக்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "அவரால் எப்படி இதைச் சொல்ல முடிகிறது எனத் தெரியவில்லை. ஒருவர் தினசரி எத்தனை நேரம் பயணத்திற்கு மட்டும் செலவழிக்க வேண்டி இருக்கிறது என்பது அவருக்குத் தெரியுமா.. அவர் சொல்வது போல வேலை செய்தால் குடும்பத்தினருடன் நேரத்தையே செலவழிக்க முடியாது" என்று பதிவிட்டார்.
நெட்டிசன்கள்: அதேபோல மற்றொரு நபர், "இதன் மூலம் நாராயண மூர்த்தி பெண்களை வேலை செய்யும் இடத்தில் இருந்து வெளியேற்றுகிறார். வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு போன்ற வேலைகளை ஆண்கள் ஒருபோதும் செய்யப் போவதில்லை. ஏனென்றால் இந்தியர்களின் மனநிலை அப்படி.. இந்தச் சூழலில் 70 மணி நேரம் வேலை என்றால் பெண்கள் குடும்பத்தினரைக் கவனிக்க வேலையை விடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
இவ்வளவு நேரம் வேலை செய்தால்.. முறையாக தூங்கக் கூட முடியாது என்றும் இதனால் மனநல பிரச்சினைகள் கூட ஏற்படும் என அவர் கூறியுள்ளார். மற்றொரு நபர் நாராயண மூர்த்தி தனது ஊழியர்களை என்ன அடிமை என நினைக்கிறாரா.. எப்படி 70 மணி நேரம் வேலை செய்யும் ஒருவரால் தனது குடும்பத்தைப் எப்படி பார்த்துக் கொள்ள முடியும் என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.

மற்றொரு நபர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் சராசரியாக புதிய ஐடி ஊழியருக்கு மாதம் 20 ஆயிரம் கிடைக்கிறது. இதில் நாம் வாரம் 70 மணி நேரம் எனக் கணக்கிட்டால்.. ஒரு மணி நேரத்திற்கு ஒரு டாலருக்கும் குறைவாகவே இருக்கும். அமெரிக்காவில் ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியருக்குக் கூட இதை விட அதிக ஊதியம் கிடைக்கும். இதில் ஒருவரால் குடும்பத்தை எப்படிப் பார்த்துக் கொள்ள முடியும்" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications