உலகில் தங்கம் மட்டுமே எப்போதும் நிலையானதாக இருக்கிறது. முன்பெல்லாம் தங்கம் என்பது பாரம்பரியம் மற்றும் பரம்பரை சொத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இளைய தலைமுறையினருடன் (Gen Z) ஒரு புதிய பரிமாணத்தை கண்டுள்ளது. இன்றைய வாடிக்கையாளர்களுக்கு தங்கம் என்பது வெறும் செல்வமோ, பாரம்பரியம் மட்டுமல்லாமல் முக்கிய முதலீடாக உள்ளது.
இதுகுறித்து குமாரி ஃபைன் ஜுவல்லரி நிறுவனத்தின் நிறுவனர் சுப்ரியா கடாரியா கூறுகையில், "எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த ஃபேஷன் உலகில், தங்க நகைகள் அதன் மதிப்பிலும், ஸ்டைலிலும் தொடர்ந்து நிலையாகவே இருந்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார். இதனால் தான், தங்கத்தில் பலரும் தற்போது முதலீடு செய்து வருகின்றனர்.

இன்றைய தலைமுறையினர் வெறுமனே தங்கத்தை வைத்திருப்பதில் மட்டுமே திருப்தி அடைவது கிடையாது. அவர்கள் அதை தங்களின் விருப்பப்படி மாற்றிப் பயன்படுத்த விரும்புகின்றனர். அவர்களுக்கு தங்கத்தின் மதிப்பு அதன் தரத்தில் மட்டும் அல்ல. அதன் தனிப்பட்ட குணாதிசயத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளனர். மேலும், அவர்கள் தங்கத்தை மாற்றிக் கொள்ளக் கூடிய நகைகளையே தேர்வு செய்கின்றனர்.
இதனால் தங்கத்தின் மீதான வெளிப்பாடு மற்றும் கவனம் நகை வடிவமைப்பு கலையையே மாற்றியமைத்து வருகிறது. அதாவது, அலுவலகம் முதல் பயணம் வரை, பார்ட்டி முதல் கூட்டம் வரை, பாரம்பரிய நிகழ்வுகள் முதல் ட்ரெண்டுகள் வரை என அனைத்து சூழல்களுக்கும் பொருந்தக் கூடிய நகைகளையே இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர்.
இந்த உணர்வை மையமாக கொண்டுதான் Litestyle by PNG என்ற பிராண்ட், தங்கத்திற்கு ஒரு சமகால வடிவத்தை கொடுக்க முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து லிட்ஸ்டைல் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் இ-காமர்ஸ் தலைவர் ஹேமந்த் சவான் கூறுகையில், "லைட்ஸ்டைல் நிறுவனம் மூலம், தங்க நகைகள் பெரிய நிகழ்வுகளுக்கும், பரம்பரை சொத்துகளுக்கும் மட்டுமே என்ற கருத்தை நாங்கள் மாற்றியமைக்க விரும்பினோம்.
ஆடம்பரமான விழாக்களுக்கும், பாரம்பரிய நிகழ்வுகளுக்கும் மட்டுமே என்றிருந்த தங்க நகைகளின் பயன்பாடு, இன்று இளைய தலைமுறையினால் அது முழுமையாக மாறியுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த தலைமுறையினரை பொறுத்தவரை, நகைகள் என்பவை வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. அவை தங்களின் தனிப்பட்ட ஆளுமையை வெளிப்படுத்துவதாக கருதுகின்றனர். அதாவது, நான் யார்..? என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காகவே அவர்கள் நகைகளை பயன்படுத்துகின்றனர்.
திருவிழாவுக்கான அடையாளமாக மட்டும் இல்லாமல், தங்கம் என்பது அலங்காரப் பொருளாக மாறிவிட்டது. தங்க வளையங்கள் நவீன ஸ்டைலின் அடையாளமாக மாறிவிட்டன. இந்த மாற்றங்கள் பாரம்பரியத்தை நிராகரிப்பது என்று இல்லாமல், அதற்கு மாறாக அதை புதிய வடிவில் கற்பனை செய்யும் வகையில் உள்ளது. அதனால்தான் Gen Z தலைமுறையினரிடம் கூட தங்கம் என்பது பாதுகாப்பானதாகவும், காலத்தால் அழியாததாகவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications