அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினமான திருதியை திதியில், கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்து மதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு, அட்சய திருதியை ஏப்ரல் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் லட்சுமி தேவியையும் விஷ்ணு பகவானையும் வழிபட்டால் மனமகிழ்ச்சி கிடைக்கும். அதேபோல் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பல நூறு ஆண்டுகளாக மக்கள் மனதில் இருக்கிறது. இதனால் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதில் மக்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அட்சய திருதியை முன்னிட்டு, நகைகடைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளும் அறிவித்துள்ளன. விதவிதமான டிசைன்களில் நகைகள் அட்சய திருதியை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் புது நகைகளையும் சிலர் பழைய நகைகளை மாற்றி புதிய நகைகளையும் அட்சய திருதியை நாளில் தங்களுக்கு பிடித்த தங்கம் மற்றும் வைரம், வெள்ளி நகைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்வது வழக்கம்.

ஆனால், தற்போது, சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் தடுமாற்றம் நீடிக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வரிவிதிப்பு யுத்தம் நாளுக்கு நாள் வலுத்த வண்ணம் இருப்பதால், சர்வதேச அளவில் பொருளாதாரச் சூழலிலும் அச்சம் நிலவுகிறது. மற்ற நாடுகளுக்கு வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தாலும், சீனாவுக்கு 145% அளவில் வரியை கூட்டியிருக்கிறார் ட்ரம்ப்.
இந்த வரி யுத்தத்தை எதிரொள்ள, தான் வாங்கி வைத்திருந்த அமெரிக்க கடன் பத்திரங்களை எல்லாம் விற்றுவிட்டு, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்து வருகிறது சீனா. மேலும், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் முழுமையாக மீள முடியாமல் இருக்கின்றன. இதனால், பாதுகாப்பு கருதி தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால், தங்கத்தின் தேவை உயர்ந்து, ஆபரணத் தங்கம் விலையும் வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வருகிறது.
நிலைமை இப்படியிருக்கையில் தமிழகத்தில் நேற்று தமிழ் புத்தாண்டு (14.04.2025) அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,720-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ. 69,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், தங்கம் விலை எப்போது வேண்டுமானாலும் திடீரென அதிகரிக்கும். இப்படி தங்கம் விலை மாறி மாறி குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பல நகைக்கடைகள், அட்சய திருதியை முன்பதிவுக்கு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளன. அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க முன்பதிவு செய்ய வருவோர், விரும்பிய நகைகளை தேர்வு செய்து, 10 சதவீத தொகையை முன்பணமாக செலுத்தி, முன்பதிவு செய்கின்றனர். அதாவது, முன்பதிவு செய்த தினத்தில் இருந்து அட்சய திருதியை வரை, எந்த நாளில் விலை குறைவாக உள்ளதோ, அந்த விலைக்கு அட்சய திருதியை நாளில் நகை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications