டெலாவேர் : இந்தியாவின் பிரபலமான எட்டெக் நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்தில் அமெரிக்கக் கிளையான பைஜூஸ் ஆல்பா இன்க் மற்றும் இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்களுக்கும் மத்தியிலான அமெரிக்க நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு தற்போது முக்கிய திருப்பத்தை எட்டியுள்ளது.
கடுமையான நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு உள்ள பைஜூஸ் நிறுவனத்திடம் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூட முடியாத நிலையில் உள்ளது. அமெரிக்காவில் பைஜூஸ் ஆல்பா இன்க் நிறுவனத்திற்குச் சொந்தமான பணம் குறித்து முக்கிய வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

பைஜூஸ் ஆல்பா இன்க் வங்கி கணக்கில் இருக்கும் பணம் இந்நிறுவனத்திற்குக் கடன் வழங்கியவர்களுக்குத் திருப்பி பணம் செலுத்துவதற்கு மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அமெரிக்க டெலாவேர் நகர நீதிமன்றத்தின் நீதிபதி ஜான் டோர்சி வியாழக்கிழமை வங்கி கணக்கில் இருக்க வேண்டிய 533 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை, கடனை திருப்பி செலுத்த மட்டுமே பயன்படுத்தும் வகையில் ப்ரீஸ் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார்.
கல்வி தொழில்நுட்ப நிறுவனம் பணத்தைச் செலவிடுவதைத் தடுக்கும் பொருட்டு, முன்னதாக கடன் வழங்குபவர்கள் இந்த பணத்தை ஃபெடரல் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த வழக்கு பைஜூஸ் ஆல்பா இன்க் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள், ரிஜு ரவீந்திரன், Inspilearn LLC, மற்றும் Camshaft Capital Fund LP மற்றும் அதன் துணை நிறுவனங்கள் எதிராகத் தொடுக்கப்பட்டது.
அமெரிக்க டெலாவேர் நகர நீதிமன்றத்தின் நீதிபதி ஜான் டோர்சி உத்தரவின்படி, முன்பு Camshaft Capital Fund வைத்திருந்த $533 மில்லியன் கடன் தொகையை மேலும் மாற்றவோ அல்லது பயன்படுத்தவோ தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தொகை திங்க் & லேர்ன் நிறுவனர்களால் பெயரிடப்படாத, அறியப்படாத வெளிநாட்டுக் கணக்கிற்குத் தொடர்ந்து மாற்றப்பட்டு உள்ளது.
BYJU's ஆல்பா நிறுவனத்திடமிருந்து செய்யப்பட்ட நிதி பரிமாற்றம் மற்றும் அவற்றை தொடர்ந்து மறைத்தல் ஆகியவை மோசடி செயல்பாடாக இருக்கலாம் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
நீதிபதி டோர்சியின் உத்தரவு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், நிறுவனர் பைஜூ ரவீந்திரனின் சகோதரருமான ரிஜு ரவீந்திரனை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டது. அதாவது பணம் எங்கே உள்ளது என்ற முக்கியமான மையக் கேள்விகளுக்கு பதில் பெற ரிஜு ரவீந்திரனும் உதவ வேண்டும் என்று நீதிபதி டோர்சி உத்தரவிட்டார்.
ரிஜு ரவீந்திரன் திங்க் & லேர்ன் நிறுவனத்திடம் இருந்து இந்த தகவலை அறிய முடியாது என்று கூறுவது நான் நம்பவில்லை என்று நீதிபதி டோர்சி குறிப்பிட்டார்.
இந்த தீர்ப்பு கடன் வழங்குபவர்களுக்குக் கலவையான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. பணத்தின் இருப்பிடம் குறித்த மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியில் இது ஒரு முக்கிய படியாக இருந்தாலும், நிதி முடக்கம் செய்யப்பட்டதால் பைஜூஸ் நிறுவனத்தின் நிதி நிலை மேலும் சிக்கலுக்குள்ளாகும்.
பைஜூஸ் கொரோனா காலத்தில் உச்சக்கட்ட வளர்ச்சியில் இருக்கும் போது, அமெரிக்காவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஒரு நிறுவனத்தைத் துவங்கியது. ஆனால் இந்த முயற்சியில் எவ்விதமான பலனும் அளிக்காத நிலையில் தற்போது அமெரிக்க நிறுவனத்தைத் திவாலானதாகப் பிப்ரவரி மாதம் அறிவித்துள்ளது.
இதன் வாயிலாகத் திவால் பாதுகாப்பைக் கோரி அமெரிக்காவின் டெலாவேர் நீதிமன்றத்தில் சாப்டர் 11 என்ற அதிகாரப்பூர்வ திவால் நடவடிக்கையை பிப்ரவரி மாதம் துவங்கியது. அமெரிக்காவின் பைஜூஸ் நிறுவனம் சுமார் 10 பில்லியன் டாலர் அளவுக்கான கடன் நிலுவை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications