இன்றளவில் அனைவருக்கும் பிஸ்னஸ் துவங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, ஆனால் வெற்றி என்பது எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. பெங்களூரை சேர்ந்த குஷால் ரெட்டி மற்றும் சாஹக் ஜெயின் உருவாக்கிய kried என்ற புட்-டிரக் பிஸ்னஸ் இன்று சமுக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
குஷால் ரெட்டி மற்றும் சாஹக் ஜெயின் பிஸன்ஸ் துவங்க வேண்டும் என திட்டமிட்டதும், முதலில் அவர்களின் எண்ணம் உணவு துறை பக்கம் தான் சென்றது. 4 லட்சம் முதலீட்டில் இன்றைய டிரெண்டுக்கு ஏற்றார் போல் கிளவுட் கிட்சன் போல் துவங்கினர்.

கிளவுட் கிட்சன் என்றால் இணையம் வாயிலாக மட்டுமே உணவு ஆர்டர் எடுக்கப்பட்டு, டெலிவரி செய்யப்படும். கடைகளில் வந்து மக்கள் சாப்பிடவது போல இது இயங்காது. ஆனால் வர்த்தகம் என்பதால் செலவுகள் இல்லை என கணக்கிட வேண்டும், இதிலும் எக்கச்சமான செலவுகள் உள்ளதாக குஷால் ரெட்டி மற்றும் சாஹக் ஜெயின் கூறுகின்றனர்.
சோமேட்டோ, ஸ்விக்கி போன்ற முன்னணி உடனவு டெலிவரி தளத்தில் ஒவ்வொரு உணவு ஆர்டருக்கும் அதிகப்படியான கமிஷன் வசூலிக்கப்படுவதாகவும், விளம்பர செலவுகள் லிமிட்டை தாண்டியதாலும், விளம்பரம் மற்றும் ஆன்லைன் ஆப் உதவியில்லாமல் நேரடியாக ஆர்டர்கள் பெற முடியாத காரணத்தாலும் இந்த கிளவுட் கிட்சன் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போனதால் மூட வேண்டிய கட்டாயம் உருவானது என குஷால் மற்றும் சாஹக் கூறினர்.
இதில் துவண்டுவிடாமல் இருவரும் பல மாற்று வழிகளை யோசித்து, நேரடி வாடிக்கையாளர்களை பெறுவதை முக்கிய இலக்காக கொண்டு களத்தில் இறங்கினர்.
பெங்களூரில் ப்ரைடு சிக்கன் பர்கர் வர்த்தகத்தை புட் -டிரக் வடிவில் துவங்க முடிவு செய்தனர். இதற்கு Kried எனவும் பிராண்ட் பெயர் வைக்க முடிவு செய்தனர். இந்த முறை பிஸ்னஸ்-ஐ சற்று மாறுப்பட்ட முறையில் கையாள முடிவு செய்த குஷால் மற்றும் சாஹக் வர்த்தகத்தை துவங்கும் முன்பே மக்களிடம் தங்களுடைய பிராண்டையும், தங்களின் பயணத்தையும் கொண்டு சேர்க்க முடிவு செய்தனர்.
இதனால் Kried பிஸ்னஸை துவக்கம் முதல் சமுக வலைத்தளத்தில் கன்டென்டாக மாற்றி, அவர்களுடைய பயணத்தை பதிவிட்டு வந்தனர். இதில் கிளவுட் கிட்சன் தோல்வி அடைந்து, முதல் புட் டிரக் வாங்கி, அதை தயார் செய்தது, பிராண்ட் அறிமுகம், சமைப்பது வரையில் அனைத்தையும் கன்டென்டாக பதிவிட்டனர்.
இதன் மூலம் கடையை திறப்பதற்கு முன்பே 5000 பாலோவர்களை பெற்றனர், இது பெங்களூர் பகுதி மக்கள் மத்தியில் டிரெண்டான காரணத்தால் Kried திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 100 வாடிக்கையாளர்கள் வந்தனர்.
தற்போது தினமும் 350-400 வாடிக்கையாளர்கள் உடன் தினமும் 1 லட்சம் ரூபாய் வரையில் வர்த்தகமாகிறது. இதன் மூலம் கடந்த 10 மாதத்தில் 4 லட்சம் முதலீடு 2 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை குஷால் மற்றும் சாஹக் உருவாக்கியுள்ளனர்.
தற்போது இவர்களின் கடை ஜேபி நகர் பகுதியில் இயங்கி வருகிறது. மேலும் Kried பக்கத்தை சுமார் 37000 பேர் பாலோ செய்கின்றனர். மேலும் இவர்கள் தங்களுடைய சொந்த வெப்சைட்டில் ஆன்லைன் ஆர்டர் சேவையும் துவங்கியுள்ளனர்.
மாத சம்பளம் வாங்கும் அனைவரின் மனதிலும் இருக்கும் ஒரு முக்கியமான எண்ணம், நமக்குன்னு ஒரு சொந்த பிஸ்னஸ்.. சின்னதோ, பெருசோ சொந்தமாக யாரையும் நம்பாமல் ஒரு வாழ்க்கை வேண்டும் என்பது தான்.
ஆனால் உண்மையில் பிஸன்ஸ் என்பது எளிதானது அல்ல, பல சோதனைகள், தடுமாற்றங்கள், பொறுமை - மனவலிமையை இழக்கும் ஒரு போராட்டம் இது. இதையெல்லாம் கடந்து வந்தால் கட்டாயம் வெற்றி. இதை இன்று வெற்றிப்பெற்று இருக்கும் அனைத்து முதலாளிகளும் சந்திக்க கூடிய பாதை தான்.
இவை அனைத்தையும் தாண்டி நிதி நிலை, ஒரு தவறான முடிவு, ஒரு துறையை முழுமையாக தெரிந்துக்கொள்ளாமல் இறங்கினால் பெரும் நிதியை இழக்க கூடும். இது உங்களுடைய வாழ்க்கையே மாற்றிவிடும். எனவே குஷால் ரெட்டி மற்றும் சாஹக் ஜெயின் போல் மனம் தளராமல் தீவிரமாக திட்டமிட்டு பிஸ்னஸில் அடியெடுத்து வையுங்கள். வெற்றி நிச்சயம்!


Click it and Unblock the Notifications