இந்தியா முழுவதும் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தலைமை அமைப்பாக இருக்கும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (NFCSF), சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை (MSP) 35% உயர்த்தி ஒரு கிலோ ரூ.42 ஆக உயர்த்துமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக அமைந்திருக்கும் வேளையில், இந்த ஆட்சியில் மிக முக்கியமான வாக்குறுதியாக இருப்பது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது தான்.

இதேவேளையில் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு எத்தனால் கலப்பை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது, இதற்குச் சர்க்கரை உற்பத்தி உயர்த்துவது மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இந்த நிலையில் இவ்விரண்டையும் இணைக்கும் வகையில் தற்போது NFCSF அமைப்பு சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை (MSP) 35% உயர்த்தி ஒரு கிலோ ரூ.42 ஆக உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை (MSP) என்பது 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது கடைசியாக 2019 பிப்ரவரியில் ஒரு கிலோவுக்கு ரூ.31 ஆகத் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், சர்க்கரை விலைகள் குறைந்தபட்ச ஆதார விலையை விட அதிகமாகவே உள்ளன.
மகாராஷ்டிராவில் ஆலைகளில் இருந்து வெளிவரும் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.36 ஆக உள்ளது, அதே சமயம் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.42-44 வரையில் விற்கப்பட்டு வருகிறது.
"கரும்பின் நியாயமான மற்றும் லாபகரமான விலை (FRP) ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், சர்க்கரையின் குறைந்தபட்ச ஆதார விலையைக் குறைந்தபட்சம் ரூ.42/கிலோ உயர்த்துமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்று NFCSF தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, NFCSF ஏற்கனவே மத்திய அரசிடம் தனது கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. சர்க்கரை தொழில்துறையின் பல்வேறு பிரச்சினைகளை விவாதிப்பதற்காக புனேவில் NFCSF, மத்திய உணவு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகங்களின் இயக்குநர்கள் & தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் (NCDC) ஆகியோருடன் இணைந்து முக்கியமான கூட்டம் நடத்தப்பட்டது.
எத்தனால் தயாரிப்பில் சர்க்கரை உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன:
மூலப்பொருள்: எத்தனால் தயாரிப்பதற்குச் சர்க்கரை ஒரு முக்கிய மூலப்பொருளாகும். சர்க்கரை, கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இனிப்பு, ஈஸ்ட் என்ற நுண்ணுயிரிகள் மூலம் எத்தனாலாக மாற்றப்படுகிறது. இந்த செயல்பாட்டில், ஈஸ்ட் சர்க்கரையை உடைத்து எத்தனால் மற்றும் கார்பன்டை ஆக்சைடாக மாற்றுகிறது.
மொலாசஸ் (Molasses): சர்க்கரை உற்பத்தியின் போது கிடைக்கும் ஒரு துணைப்பொருள் தான் இந்த மொலாசஸ். இது கரும்பின் சாற்றிலிருந்து சர்க்கரை பிரித்தெடுக்கப்பட்ட பிறகு எஞ்சியிருக்கும் கரும்பு சிரப் ஆகும்.
இந்த மொலாசஸ், சர்க்கரையை விட குறைந்த விலையுள்ள மூலப்பொருள் ஆக இருப்பதால், எத்தனால் தயாரிப்பில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மொலாசஸிலும் சர்க்கரை இருப்பதால், அதில் ஈஸ்ட் சேர்த்து எத்தனாலாக மாற்றலாம்.
எனவே, சர்க்கரை உற்பத்தி இரண்டு வழிகளில் எத்தனால் தயாரிப்பிற்கு உதவுகிறது, 1. நேரடியாகச் சர்க்கரையை மூலப்பொருளாகப் பயன்படுத்தி எத்தனால் தயாரிப்பது. 2. மொலாசஸ் என்ற துணைப்பொருளை உருவாக்குவதன் மூலம் எத்தனால் தயாரிப்பிற்கு மலிவான மூலப்பொருளை வழங்குதல்.
1 டன் கருப்பில் இருந்து 110 கிலோ சர்க்கரை கிடைக்கும், இதில் கிடைக்கும் மொலாசஸ் வைத்து 10 லிட்டர் எத்தனால் கலக்கப்படும். தற்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது 10 லிட்டர் பெட்ரோலில் எத்தனால் கலப்பு மூலம் அதிகப்படியாக 12 லிட்டர் கிடைக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications